பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பஞ்சாயத்துத் தலைவர்களுக்குப் பாராட்டு விழா நடைபெறும்

प्रविष्टि तिथि: 24 JAN 2026 2:40PM by PIB Chennai

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், 2026-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அன்று, புது தில்லியில் உள்ள கடமைப் பாதையில் நடைபெறும் 2026 குடியரசு தின அணிவகுப்பைக் காண சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளைக் கௌரவிக்கும் வகையில் ஒரு பாராட்டு விழாவை ஏற்பாடு செய்கிறது. இந்த விழாவில், மத்திய பஞ்சாயத்து ராஜ் துறை இணையமைச்சர் எஸ். பி. சிங் பாகேல், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளர் திரு. விவேக் பரத்வாஜ் மற்றும் அமைச்சகத்தின் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் கௌரவிக்கப்படுபவர்களுக்குப் பாராட்டுத் தெரிவிப்பார்.

இந்த நிகழ்வில், யுனிசெஃப் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட 'பஞ்சாம்' பஞ்சாயத்து உதவி மற்றும் செய்தி அனுப்பும் சாட்போட், கிராமோதய சங்கல்ப் இதழின் 17-வது பதிப்பு, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள் குறித்த அடிப்படைப் புள்ளிவிவரங்களின் தொகுப்பு 2025, பஞ்சாயத்து மட்டத்தில் சேவை வழங்குதல் குறித்த நிபுணர் குழு அறிக்கை மற்றும் பெசா செயல்திறன் மற்றும் செயலாக்கத் தரவரிசைக் குறியீடுகள் உள்ளிட்ட அமைச்சகத்தின் முக்கிய முன்முயற்சிகள் மற்றும் வெளியீடுகளும் வெளியிடப்பட உள்ளன. அரசியலமைப்பு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட 'உங்கள் அரசியலமைப்பை அறிந்துகொள்ளுங்கள்' வினாடி வினா மற்றும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

மத்திய அரசின் முதன்மைத் திட்டங்களில் முழுமையான இலக்கை அடைந்த பஞ்சாயத்துகளைச் சேர்ந்த தலைவர்கள்கிராமத் தலைவர்கள் மற்றும் வட்டார, மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள் கௌரவிக்கப்படுபவர்களில் அடங்குவர். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் பரிந்துரைக்கப்பட்ட சுமார் 240 பஞ்சாயத்துத் தலைவர்கள், அவர்களின் அடிமட்டப் பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்படுகிறார்கள். குடியரசு தின அணிவகுப்பிற்காக, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்/உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களையும் அவர்களது துணைவர்களையும் சேர்த்து, மொத்தம் சுமார் 450 சிறப்பு விருந்தினர்களை அமைச்சகம் அழைத்துள்ளது. இந்த சிறப்பு அழைப்பாளர்கள், 2026-ம் ஆண்டு ஜனவரி 25-ஆம் தேதி அன்று பிரதமரின் சங்கராலயாவுக்குச் சென்று, சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் தலைமைத்துவம் மற்றும் ஆளுகைப் பயணத்தை அனுபவிப்பார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2218090&reg=3&lang=1

***

TV/PKV/RJ


(रिलीज़ आईडी: 2218199) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Malayalam , English , Urdu , हिन्दी , Marathi