பிரதமர் அலுவலகம்
உத்தரப் பிரதேச மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
24 JAN 2026 8:50AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச மாநிலத்தின் நிறுவன தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்களுக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் செழுமைக்கு அவர்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்கையும் அவர் பாராட்டியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள பிரதமர், இரட்டை எஞ்சின் அரசு மற்றும் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயல்படும் மக்களின் தீவிரப் பங்களிப்புடன், கடந்த ஒன்பது ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் ஒரு நலிவடைந்த நிலையிலிருந்து ஒரு முன்மாதிரியான மாநிலமாக தனது பயணத்தை மாற்றியமைத்துள்ளது என்று கூறியுள்ளார்.
மாநிலத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ள பிரதமர், உத்தரப் பிரதேசத்தின் அபரிமிதமான ஆற்றல், தேசத்தின் முன்னேற்றத்தை ஆற்றல் மிக்கதாகவும், முன்னோக்கியதாகவும் வைத்திருப்பதில் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது என்று கூறியுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217999®=3&lang=1
***
TV/PKV/RJ
(रिलीज़ आईडी: 2218164)
आगंतुक पटल : 7