இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

காரைக்காலில் இருந்து அமிர்தசரஸ் வரை நாடு தழுவிய கொண்டாட்டங்களுடன் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வின் 58-வது பதிப்பு நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 23 JAN 2026 6:13PM by PIB Chennai

உடல் திறன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் உடற்பயிற்சி இயக்கமான ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் (சண்டேஸ் ஆன் சைக்கிள்), நிகழ்வின் 58வது பதிப்பு ஜனவரி 25 அன்று தேசிய அளவில் நடைபெற உள்ளது. இந்த இயக்கம் வாராந்திர உடற்பயிற்சி முயற்சியிலிருந்து பிராந்தியங்கள், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களைக் கடந்து மக்கள் இயக்கமாக எவ்வாறு வளர்ந்துள்ளது என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்த பதிப்பிற்குத்  தலைமை தாங்கும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை  அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா, காரைக்காலில் பொதுமக்களுடன் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளார்.

நாடு முழுவதிலுமிருந்து வரும் உடல் திறன் இந்தியா தூதர்களும் இதில் கலந்து கொள்வார்கள். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வில் பங்கேற்குமாறும், தேசிய வாக்காளர் தினக் கொண்டாட்டங்களில்  தங்களை இணைத்துக் கொள்ளுமாறும் இந்த தூதர்கள் மக்களை வலியுறுத்தி வருகின்றனர்.

"வலுவான ஜனநாயகம் ஆரோக்கியமான மற்றும் விழிப்புணர்வுள்ள குடிமக்களைச் சார்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வை  தேசிய வாக்காளர் தினம் மற்றும் #MYBharatMYVote பிரச்சாரத்துடன் இணைப்பதன் மூலம், நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் தங்கள் பொறுப்பை உணர்ந்து, இளம் இந்தியர்கள் உடற்தகுதியை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கிறோம்", என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217774&reg=3&lang=1

***

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2218113) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , Marathi , Punjabi , English , Urdu , Gujarati