நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுங்கத் தரகர்கள் உரிமத் தேர்வு மார்ச் 17-ம் தேதி நடைபெறவுள்ளது

प्रविष्टि तिथि: 23 JAN 2026 1:05PM by PIB Chennai

2026-ம் ஆண்டிற்கான சுங்கத்தரகர்கள் உரிமத் தேர்வு மார்ச் 17-ம் தேதி நடத்தப்பட உள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்படும் இந்தத் தேர்வு குறித்த விவரங்களை அறிந்து கொள்ள 25.08.2025 அன்று வெளியிடப்பட்ட விளம்பரத்தைக் காணுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  கொள்குறி வகை அடிப்படையில் நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வில் 150 கேள்விகள் இடம் பெறும். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இந்தக் கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்கும் இந்தத் தேர்வு பிற்பகல் 1 மணிக்கு நிறைவடையும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் தலா 3 மதிப்பெண்களும், தவறான விடைகளுக்கு தலா ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். இந்தத் தேர்வுக்கான மொத்த மதிப்பெண் 450 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றுள்ள மாணவர்கள், அடுத்தக் கட்டமாக நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெறுவர்.

தேர்வு தொடர்பான விவரங்களை www.cbic.gov.in  அல்லது  www.nacin.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்துகொள்ள முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217616&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2217861) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati , Malayalam