நிதி அமைச்சகம்
பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள், நபார்டு, ரிசர்வ் வங்கி பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
प्रविष्टि तिथि:
23 JAN 2026 10:44AM by PIB Chennai
நிதித்துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள், தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) ஆகியவற்றின் ஊழியர்களுக்கான ஊதிய திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும் ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் ஓய்வுபெற்ற பணியாளர்களின் ஓய்வூதியத் திருத்தத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு ஓய்வூதியதாரர்களின் நீண்டகால கோரிக்கை மற்றும் அர்ப்பணிப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் வகையிலும் அவர்களது சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 1.08.2022 என்ற பின் தேதியிட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசின் மொத்த செலவு 12.41 சதவீதம் அதிகரிக்கும். இது தற்போதைய அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியில் 14 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய விகித திருத்தத்தின் மூலம் 43,247 பொதுத்துறை பொதுக் காப்பீட்டு நிறுவன ஊழியர்கள் பயனடைகின்றனர். இந்த திருத்தப்பட்ட ஊதிய விகிதம் 1.04.2010-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களின் தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான சந்தா தொகை 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
குடும்ப ஓய்வூதிய விகிதம் 30 சதவீதம் அளவிற்கு திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 15,582 குடும்ப ஓய்வூதியாதாரர்களின் 14,615 ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும். இதன் மூலம் மத்திய அரசின் செலவுத்தொகை 8,170.30 கோடி ரூபாய் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217553®=3&lang=1
***
AD/SV/RJ/PD
(रिलीज़ आईडी: 2217703)
आगंतुक पटल : 21