எரிசக்தி அமைச்சகம்
இந்தியாவின் மின்பரிமாற்ற வலையமைப்பு 5 லட்சம் சுற்று கி.மீ-ஐத் தாண்டியது
प्रविष्टि तिथि:
22 JAN 2026 2:05PM by PIB Chennai
இந்தியாவின் தேசிய மின் பரிமாற்ற வலையமைப்பு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 5 லட்சம் சுற்று கிலோமீட்டருக்கும் (Circuit K.M.) மேற்பட்ட மின்பகிர்மான வழித்தடங்களையும் (220 கிலோ வோல்ட் மற்றும் அதற்கு மேல்) 1,407 கிகாவோல்ட்-ஆம்பியர் (ஜிவிஏ) உருமாற்றத் திறனையும் (220 கிலோ வோல்ட் மற்றும் அதற்கு மேல்) கடந்து சென்றுள்ளது.
ஏப்ரல் 2014 முதல், நாட்டின் மின் பரிமாற்ற வலையமைப்பு 2.09 லட்சம் சதுர கிலோமீட்டர் மின்பகிர்மான வழித்தடங்கள் சேர்க்கப்பட்டதன் மூலம் 71.6% வளர்ச்சியடைந்துள்ளது. இது உருமாற்றத் திறனை 876 கிகாவோல்ட்-ஆம்பியர்-ஆல் அதிகரித்துள்ளது. தற்போது 1,20,340 மெகாவாட்டாக இருக்கும் இடை-பிராந்திய மின் பரிமாற்றத் திறன், பிராந்தியங்களுக்கு இடையேயான மின்சார பரிமாற்றத்தை செயல்படுத்தி, "ஒரு நாடு - ஒரு தொகுப்பு- ஒரு அதிர்வெண்" என்ற தொலைநோக்குப் பார்வையை வெற்றிகரமாக நனவாக்கியுள்ளது.
5 லட்சம் சுற்று கிலோமீட்டர் நீளமுள்ள மின்பகிர்மான வழித்தடங்களின் மைல்கல், நாடு முழுவதும் நம்பகமான, மலிவான மற்றும் பாதுகாப்பான மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்கான அரசின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பில் விரைவான வளர்ச்சியை ஆதரிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217216®=3&lang=1
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2217479)
आगंतुक पटल : 6