பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தினவிழாவில் தில்லி கடமைப்பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு அமைச்சகங்களின் அலங்கார ஊர்திகள் பங்கேற்கின்றன

प्रविष्टि तिथि: 22 JAN 2026 4:39PM by PIB Chennai

குடியரசு தினத்தன்று (26.01.2026) தில்லி கடமைப்பாதையில் நடைபெறும் அணிவகுப்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 17 அலங்கார ஊர்திகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள், துறைகளின் 13  அலங்கார ஊர்திகள் என மொத்தம் 30 ஊர்திகள் அணிவகுத்துச் செல்லவுள்ளன.

சுதந்திரத்திற்கான தாரக மந்திரமான வந்தே மாதரம் மற்றும் வளமையின் தாரக மந்திரமான தற்சார்பு இந்தியா என்ற கருப்பொருளுடன் இந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறவுள்ளது. 150 ஆண்டுகால தேசியப் பாடலான வந்தே மாதரம் பல்வேறு துறைகளில் விரைவான வளர்ச்சி மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் விதமாக இந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டின் சார்பில் வளர்ச்சிக்கான தாரக மந்திரமாக விளங்கும் தற்சார்பு இந்தியா என்ற கருப்பொருளுடன் அலங்கார ஊர்தி அணிவகுக்க உள்ளது.  

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217276&reg=3&lang=1

***

AD/SV/KPG/SE


(रिलीज़ आईडी: 2217394) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Malayalam