PIB Headquarters
azadi ka amrit mahotsav

இந்தியாவில் எதிர்கால தண்ணீர் தேவைக்கான நிலத்தடி நீர் மேலாண்மையை வலுப்படுத்தும் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 22 JAN 2026 12:32PM by PIB Chennai

நிலத்தடி நீர் மேலாண்மை என்பது ஒருங்கிணைந்த நீர்வள மேலாண்மை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகும்.

இந்தியாவில்  நிலத்தடி நீர் மட்டங்களைக் கண்காணிப்பதற்கான 43,228 நிலையங்கள், 712 நீர்வள ஆதார மையங்கள் 53,264  அடல் நீர்தரநிலைக் கண்காணிப்பு நிலையங்கள் உள்ளன. நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில், மழைநீர் சேகரிப்பு, நீர்நிலைகள் புனரமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகளை மத்திய அரசு செய்படுத்தி வருகிறது.

நாட்டின் விவசாயத்திற்குத் தேவையான நீர்பாசன வசதிகள், குடிநீர் விநியோகம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கு ஆதார வளமாக உள்ளது. இது 62 சதவீத பாசனத் தேவைகளையும் 85 சதவீத கிராமப்புறக் குடிநீர் விநியோகத்தையும், 50 சதவீத நகர்ப்புற நீர்த் தேவையையும் பூர்த்தி செய்கிறது.

மக்கள் தொகை அதிகரிப்பு விவசாய நடவடிக்கைகளின் விரிவாக்கம், தொழில்துறை விரிவாக்கம், நகரமயமாக்கல் போன்ற நடவடிக்கைகள் நாட்டின் தண்ணீர் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளன. இத்தகைய சூழலில், அனைத்துத் தரப்பு நீர் தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் நிலையான நிலத்தடி நீர் மேலாண்மை நடவடிக்கைகளை அமல்படுத்துவது இன்றியமையாததாகிறது.  இதற்கென பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருவதுடன், ஒருங்கிணைந்த தொழில்நுட்பம் மற்றும் போதிய நிதி ஒதுக்கீடும் திட்டங்களை உரிய காலத்திற்குள் செயல்படுத்த உதவுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217195&reg=3&lang=1

***

AD/SV/KPG/KR


(रिलीज़ आईडी: 2217274) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati