சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
அவசரகால மருத்துவ சேவைகளுடன் பக்கவாத சிகிச்சைக்கான நடமாடும் வாகன வசதியை வழங்குவதில் இந்தியா 2-வது இடம் வகிக்கிறது
प्रविष्टि तिथि:
22 JAN 2026 10:49AM by PIB Chennai
இந்தியாவில் ஏற்படும் உயிரிழப்புக்கும் உடல் உறுப்புகளின் நீண்டகால செயலிழப்புக்கும் பக்கவாத பாதிப்புகள் முக்கிய காரணியாக உள்ளது. பக்கவாத பாதிப்புக்கு உடனடி சிகிச்சை தேவைப்படுவதால் ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சிகிச்சைக்கான காலதாமதம் ஏற்படும் ஒவ்வொரு நிமிடமும் 1.9 பில்லியன் மூளைச் செல்கள் பாதிப்படைகின்றன. உரிய நேரத்தில் சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் உயிரிழப்புகளைத் தடுப்பதுடன் வாழ்நாள் முழுவதும் ஏற்படும் உடல் உறுப்புகள் செயலிழப்பையும் தடுக்க முடியும்.
கிராமப்புறங்கள் மற்றும் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பக்கவாத நோய்க்கான சிகிச்சைப் பெறுவதற்காக மருத்துவமனைகளை சென்றடைவதற்கு எடுத்துக் கொள்ளும் அவகாசத்தைக் குறைக்கும் வகையில் இந்த நடமாடும் சிகிச்சை வசதியை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நடமாடும் மருத்துவச் சிகிச்சை வாகனம் அசாம் மாநில அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் டாக்டர் ராஜீவ் பால் தெரிவித்துள்ளார். நடமாடும் பக்கவாத சிகிச்சைக்கான வாகனங்கள் முதன் முதலில் ஜெர்மனியில் உருவாக்கப்பட்டது என தெரிவித்த அவர், இது போன்ற வாகனங்களை வடகிழக்கு மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்கள், தொலைதூரப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளில் அவசரகால மருத்துவ சேவைகளை உடனடியாக வழங்குவதற்கு வகை செய்கிறது. இஸ்கிமிக் பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த நடமாடும் மருத்துவ வாகனத்தை அவசரகால சிகிச்சையுடன் ஒருங்கிணைத்ததில் இந்தியா உலகின் 2-வது நாடாக உருவெடுத்துள்ளதாக திரு ராஜீவ் பால் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2217160®=3&lang=1
***
AD/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2217238)
आगंतुक पटल : 15