குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
மாணவர்கள் தெளிவான இலக்குகளை நிர்ணயித்து செயல்பட வேண்டும் – குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்
प्रविष्टि तिथि:
21 JAN 2026 6:13PM by PIB Chennai
பெங்களூருவில் உள்ள சிஎம்ஆர் தொழில்நுட்பக் கழகத்தின் வெள்ளி விழாக் கொண்டாட்டத்தில் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக இன்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தொழில்நுட்பக் கல்வித்துறையில் சிறப்பான சேவைகளுடன் 25 ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
வெள்ளி விழா என்பது ஒரு காலத்தின் மைல்கல் மட்டுமின்றி அது தொலைநோக்கு, விடாமுயற்சி ஆகியவற்றின் கொண்டாட்டம் என்று கூறினார். தொழில்நுட்பக் கல்வி திறன்மிக்க நிபுணர்களை உருவாக்குவது மட்டுமின்றி பொறுப்பான குடிமக்களையும் நெறிமுறை சார்ந்த தலைவர்களையும் உருவாக்க வேண்டும் என்ற தமது நம்பிக்கையில் சிஎம்ஆர் தொழில்நுட்பக் கழகம் உறுதியுடன் இருந்ததற்காக அவர் பாராட்டுத் தெரிவித்தார். இக்கல்வி நிறுவனம் என்ஏஏசி-ஆல் உயர்தர ஏ++ தரத்தைப் பெற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார். அத்துடன் நிகழ்ச்சியில் பயிற்சி மையம் மற்றும் கலையரங்கையும் அவர் திறந்து வைத்தார்.
தாம் ஆளுநராக இருந்த அனுபவம் குறித்து குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், கல்வி நிலையங்களின் தரவரிசையையும் தரத்தையும் மேம்படுத்துவது குறித்து தாம் தொடர்ந்து வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார். ஆசிரியர் பற்றாக்குறையே கல்வி நிலையங்களின் மோசமான தரவரிசைக்குக் காரணம் என்றும் ஆசிரியரின் திறனை வலுப்படுத்துவது கல்வி நிலையங்களின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் நேரடியாக மேம்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
மாணவர்களிடையே உரையாற்றிய குடியரசு துணைத்தலைவர், தெளிவான இலக்குகளை நிர்ணயித்து மற்றவர்களின் செயல்பாடுகளுடன் ஒப்பிடாமல் தங்களுடைய சுயமான நடவடிக்கைகளுடன் முன்னேற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216989®=3&lang=1
***
TV/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2217114)
आगंतुक पटल : 11