மாநிலங்களவைச் செயலகம்
azadi ka amrit mahotsav

86-வது அகில இந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு உத்தரப்பிரதேசத்தில் நிறைவடைந்தது

இடுகை இடப்பட்ட நாள்: 21 JAN 2026 6:02PM by PIB Chennai

86-வது அகில இந்திய சட்டப்பேரவைத் தலைவர்கள் மாநாடு இன்று  உத்தரப்பிரதேச விதான் மண்டபத்தில் நிறைவடைந்தது. நிறைவு அமர்வில் உரையாற்றிய மாநிலங்களவை துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ், மாநாட்டின் போது நடைபெற்ற ஆக்கப்பூர்வமான விவாதங்கள் குறித்து தமது திருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், நாடு முழுவதும் இருந்து சபாநாயகர்களிடையே கூட்டு கருத்துப் பரிமாற்றம், விவாதத்தைக்  கணிசமாக வளப்படுத்தியுள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார்.

இன்றைய வளர்ந்து வரும் புவிசார் அரசியல் சூழலில், பொருளாதார வலிமை, உத்திசார் திறன் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவை தேசிய முன்னேற்றத்திற்கு இன்றியமையாதவை என்று திரு ஹரிவன்ஷ் குறிப்பிட்டார். 2014 முதல் இந்தியா இந்த திசையில் தீவிரமாக முன்னேறி வருவதாகவும், வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவிற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து உத்தரப்பிரதேசம் ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கி வருவதாகவும் அவர் கூறினார்.

சட்டமன்றங்கள் மற்றும் அரசுகளின் பகிரப்பட்ட பொறுப்பை வலியுறுத்திய திரு ஹரிவன்ஷ், அறிவார்ந்த விவாதங்கள், நல்ல கொள்கைகளை வகுத்தல் மற்றும் எதிர்கால தொலைநோக்குடன் கூடிய பார்வை மூலம் தேசிய வளர்ச்சிக்குப் பங்களிப்பது தான் அனைவரது பொதுவான நோக்கம் என்று கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216982&reg=3&lang=1       

---

TV/BR/RK


(வெளியீட்டு அடையாள எண்: 2217103) வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க: Marathi , English , Urdu , हिन्दी