பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எரிசக்தித் துறையில் சீர்திருத்தம் முதலீடுகளை ஈர்க்க மத்திய அரசு தீவிரம்
प्रविष्टि तिथि:
21 JAN 2026 2:56PM by PIB Chennai
இந்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் சார்பில், எரிசக்தி உற்பத்தி மற்றும் ஆய்வுத் துறையில் நிதி மேலாண்மை, ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் மற்றும் புதிய ஏல முறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.
இதில் காணொலி வாயிலாக உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சட்ட ரீதியான மாற்றங்கள் இந்தியாவின் எரிசக்தித் துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, கடல்சார் மற்றும் எல்லைப் பகுதிகளில் முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்களுக்கு இது ஒரு வெளிப்படையான வாய்ப்பை வழங்கும் என அவர் உறுதியளித்தார்.
இக்கூட்டத்தில் எஸ்.பி.ஐ , நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து எரிசக்தி ஆய்வுத் திட்டங்களுக்குத் தேவையான மூலதனம் மற்றும் காப்பீடு குறித்து விவாதிக்கப்பட்டது.
திருத்தப்பட்ட எண்ணெய் வயல்கள் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் மற்றும் வருவாய் பகிர்வு ஒப்பந்தம் (MRSC) ஆகியவை குறித்தும் தரவு அடிப்படையிலான புதிய ஏலச் சுற்றுகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீடுகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்தகூட்டத்தில் பேசிய மத்திய எரிசக்தி அமைச்சகச் செயலாளர் நீரஜ் மிட்டல், முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216841®=3&lang=1
---
TV/VK/RK
(रिलीज़ आईडी: 2217102)
आगंतुक पटल : 9