சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மருத்துவக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆன்லைன் பயிற்சித் திட்டம் – மத்திய இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
21 JAN 2026 4:23PM by PIB Chennai
தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் உருவாக்கியுள்ள மருத்துவக் கல்வியில் செயற்கை நுண்ணறிவு குறித்த ஆன்லைன் பயிற்சித் திட்டத்தை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல் புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.
சுமார் 50,000 மருத்துவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு மற்றும் மருத்துவ சிகிச்சைப் பயிற்சி, நோய் கண்டறிதல், சிகிச்சைக் குறித்த முடிவெடுத்தல், ஆராய்ச்சி மற்றும் மருத்துவக் கல்வி ஆகியவற்றில் அதன் நடைமுறை பயன்பாடுகள் குறித்த அடிப்படை புரிந்துணர்வை அளிக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முன்முயற்சி மருத்துவ நிபுணர்களிடையே டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துவதையும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான உபகரணங்களை சுகாதாரச் சேவை மற்றும் கல்வி பயிற்சிகளில் திறம்பட ஒருங்கிணைக்க பயன்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்ரியா படேல், இத்திட்டத்தில் சேர்வதற்காக ஏற்கனவே 42,000-க்கும் மேலான மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதைக் குறிப்பிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். சுகாதார நலனில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது விருப்பமாக மட்டுமின்றி தேவையானதாகும் என்று குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216908®=3&lang=1
***
TV/IR/KPG/RK
(रिलीज़ आईडी: 2217049)
आगंतुक पटल : 14