தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

தேர்தல் நிர்வாகத்தில் எதிர்கொள்ளப்படும் உலகளாவிய சவால்கள் குறித்த விவாதம் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை சர்வதேச மாநாட்டில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 21 JAN 2026 4:07PM by PIB Chennai

புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்த சர்வதேச மாநாடு 2026-ன் முழு அமர்வில் 42 தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தலைமை அதிகாரிகள் கலந்து கொண்டனர். தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார் தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்கர் விவேக் ஜோஷி இந்நடவடிக்கைகளை தொடங்கி வைத்தனர். 

தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தலைமை அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள் மற்றும் துணைத் தூதர்கள் உள்ளிட்ட சுமார் 60 சர்வதேச பிரதிநிதிகள் முழு அமர்வில் பங்கேற்றனர். ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்த உயர்நிலைப் பரிமாற்றத்திற்காக அவர்களை ஒருங்கிணைக்கும் வகையில், இந்த முழு அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டது. ஜனநாயகம் மற்றும் தேர்தல் நிர்வாகத்தில் எதிர்கொள்ளப்படும் உலகளாவிய சவால்கள் குறித்த தங்கள் கருத்துக்களை தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் தலைமை அதிகாரிகளும் நாடுகளின் பிரதிநிதிகளும் பகிர்ந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216896&reg=3&lang=1

***

AD/IR/KPG/RK


(रिलीज़ आईडी: 2217024) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi