தேர்தல் ஆணையம்
ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு புதுதில்லியில் தொடங்கியது
प्रविष्टि तिथि:
21 JAN 2026 3:35PM by PIB Chennai
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஜனநாயகம் மற்றும் தேர்தல் மேலாண்மை குறித்த 3 நாள் சர்வதேச மாநாடு புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கியது. மாநாட்டின் வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சாந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் இணைந்து சுமார் 60 சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்றனர். 42 தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பிரதிநிதிகள், 27 நாடுகளின் தூதர்கள் மற்றும் துணைத்தூதர்கள், 70-க்கும் மேற்பட்ட தேசிய நிறுவனங்கள், இந்திய தேர்தல் ஆணையத்தின் உயர் அதிகாரிகள், நாடு முழுவதிலும் உள்ள 36 தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட சுமார் 1,000 பேர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை வரவேற்று பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் திரு ஞானேஷ்குமார், தேர்தல் மேலாண்மை அமைப்புகளின் பணி, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மேம்பட்டுள்ளது என்று கூறினார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா 1.5 பில்லியன் மக்கள் தொகையுடன் 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களில் சிறப்பாக தேர்தலை நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216864®=3&lang=1
***
AD/IR/KPG/PD
(रिलीज़ आईडी: 2216970)
आगंतुक पटल : 22