தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஓய்வூதியக் கணக்கியல் மற்றும் மேலாண்மைக்கான அமைப்பு - டிஜிலாக்கர் இணைப்பு அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் பாதுகாப்பான, காகிதப் பயன்பாடற்ற ஓய்வூதிய ஆவணங்களை வழங்குகிறது
प्रविष्टि तिथि:
21 JAN 2026 11:02AM by PIB Chennai
மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு ஏற்ப, தொலைத்தொடர்புத் துறையின் கீழ் உள்ள அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும், ஓய்வூதியக் கணக்கியல் மற்றும் மேலாண்மைக்கான அமைப்பு இணையதளம் - டிஜிலாக்கர் தளத்துடன் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக தில்லியில் உள்ள முதன்மைத் தகவல் தொடர்பு கணக்குகள் கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை, ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியப் பட்டுவாடா ஆணைகள், பணிக்கொடை அனுமதி ஆணைகள், தகவல் தொடர்பு அனுமதி ஆணைகள் மற்றும் படிவம்-16 உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை டிஜிலாக்கர் கணக்குகள் மூலம் நேரடியாக எளிதாகப் பெறுவதற்கு அனுமதிக்கிறது. ஸ்மார்ட்போன் அல்லது கணினி வாயிலாக தேவைப்படும் நேரத்தில், உலகின் எப்பகுதியிலிருந்தும் கையாளக்கூடிய வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வசதி, பாதுகாப்பான, காகிதப் பயன்பாடற்ற செயல்பாடுகளை உறுதி செய்கிறது. வங்கி அல்லது மருத்துவச் செலவுகள் போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கான வெளிப்படைத்தன்மை, வசதி மற்றும் எளிமையான நடைமுறைகளுக்கு உத்வேகம் அளிக்கிறது.
இந்த முயற்சி காகிதப் பயன்பாட்டின் தேவையை குறைப்பதுடன், தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு, நேரத்தையும், வளங்களையும் சேமிக்க உதவுகிறது என்று தில்லி முதன்மைத் தகவல் தொடர்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் திரு ஆஷிஷ் ஜோஷி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை ஓய்வூதியதாரர்களுக்கு டிஜிட்டல் சுயசார்பை வழங்குவதுடன், காகிதப் பயன்பாடற்ற டிஜிட்டல் அடிப்படையிலான அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு இது உத்வேகம் அளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
ஓய்வூதியதாரர்கள் தங்களது ஆதார் எண் வாயிலாக https://digilocker.gov.in என்ற இணையதளத்தில், ஓய்வூதிய அடையாள எண்ணை இணைத்து, தேவையான ஆவணங்களை உடனடியாகப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் இந்தச் சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த இணையதளம் தொடர்பான விவரங்களுக்கு, பிரத்யேக உதவி தொலைபேசி எண்களும் உள்ளன. இந்த இணையதள சேவைகள் குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கான பதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216691®=3&lang=1
***
AD/SV/PD
(रिलीज़ आईडी: 2216940)
आगंतुक पटल : 5