எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய தேசிய மின்சார வரைவுக் கொள்கை 2026 வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் கருத்துக்கள் கோரப்படுகிறது

प्रविष्टि तिथि: 21 JAN 2026 9:32AM by PIB Chennai

புதிய தேசிய மின்சார வரைவுக் கொள்கை 2026-ஐ மத்திய மின்சார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அடையும் வகையில் மின்சாரத்துறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதை புதிய தேசிய மின்சார வரைவுக் கொள்கை 2026 நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கை இறுதி செய்யப்பட்டதும் 2005-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட தற்போதைய தேசிய மின்சாரக் கொள்கைக்கு மாற்றாக அமல்படுத்தப்படும்.

2005 பிப்ரவரியில் வெளியிடப்பட்ட முதலாவது தேசிய மின்சாரக் கொள்கை தேவை – விநியோகம் ஆகியவற்றுக்கு இடையேயான பற்றாக்குறை, வரையறுக்கப்பட்ட மின்சார அணுகல், போதிய உள்கட்டமைப்பு இல்லாமை உள்ளிட்ட மின்துறையின் அடிப்படை சவால்களை எதிர்கொண்டது. பின்னர் இந்தியாவின் மின்துறை மாற்றமிக்க வளர்ச்சியைக் கண்டது.  தனியார்துறை பங்களிப்புடன் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறன் நான்கு மடங்காக அதிகரித்தது. 2021 மார்ச் மாதத்திற்குள் அனைவருக்கும் மின்சாரம் என்ற இலக்கு அடையப்பட்டது. ஒருங்கிணைந்த தேசிய மின்வழித்தடம் 2013 டிசம்பரில் செயல்பாட்டுக்கு வந்தது. 2024-25-ல் தனிநபர் மின்சார நுகர்வு ஒரு மணி நேரத்திற்கு 1,460 கிலோவாட் என்ற அலகை எட்டியது.

தேசிய மின்சார வரைவுக் கொள்கை 2026 மூலம் தனிநபர் மின்சார நுகர்வு 2030-ம் ஆண்டுக்குள் மணிக்கு 2,000 கிலோவாட்டாகவும் 2047-ம் ஆண்டுக்குள் 4,000 கிலோவாட்டாகவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216661&reg=3&lang=1

***

AD/IR/KPG/PD


(रिलीज़ आईडी: 2216937) आगंतुक पटल : 14
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Odia , Telugu