குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
புதுதில்லியில் ஹரிஜன் சேவை சங்கத்தில் காந்திய சிந்தனைகளான எளிமை, சேவை, சமூக பொறுப்புணர்வு ஆகியவற்றை குடியரசு துணைத்தலைவர் எடுத்துரைத்தார்
प्रविष्टि तिथि:
20 JAN 2026 2:45PM by PIB Chennai
புதுதில்லியில் வரலாற்றுச் சிறப்புமிக்க காந்தி ஆசிரமத்தில் ஹரிஜன் சேவை சங்கத்தை இன்று பார்வையிட்ட குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் அங்கு மகாதேவ் தேசாய் நூலக கட்டடத்தை திறந்து வைத்தார். 1930 மற்றும் 1940-ம் ஆண்டுகளில் தில்லிக்கு வருகை தந்திருந்தபோது மகாத்மா காந்தியுடன் கஸ்தூர்பா காந்தியும் தங்கியிருந்த ஆசிரமத்தில் உள்ள கஸ்தூர்பா அருங்காட்சியகத்தை குடியரசு துணைத்தலைவர் பார்வையிட்டார். இப்பயணம் தமக்கு ஆழமான உணர்ச்சி மிக்கதாக உள்ளது என்று விவரித்த குடியரசு துணைத்தலைவர், கஸ்தூர்பா பயன்படுத்திய எளிமையான வீடு, சமையலறை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடும் போது எளிமை, தியாகம், அசைக்கமுடியாத உறுதிப்பாடு கொண்ட இந்தியத்தலைவர்களின் கடும் வாழ்க்கையை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டார். மகாதவ் தேசாய் நூலக விரிவாக்கம் குறித்து உரையாற்றிய அவர், இது வெறும் இடவிரிவாக்கம் அறிவுதான் சமூக மாற்றத்திற்கான மிகவும் நீடிக்கத்தக்க கருவியாக திகழ்கிறது என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
மகாத்மா காந்தியின் தனிப்பட்ட வாழ்க்கைக் குறித்து குறிப்பிட்ட குடியரசு துணைத்தலைவர், மதுரை ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்திய விவசாயிகளின் வறுமையைக் கண்ட காந்தி, மேற்கத்திய ஆடையை துறக்கும் முடிவை எடுத்து வேட்டி மட்டுமே அணிவது என்று உறுதிபூண்டதாக அவர் நினைவு கூர்ந்தார். இந்த மாற்றத்துடன் பொதுமக்களிடையே தன்னை அடையாளப்படுத்தி அவர்களின் முன்னேற்றத்திற்காக உழைக்க காந்தி தமது வாழ்நாளை அர்ப்பணித்தாக கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216407®=3&lang=1
***
AD/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2216513)
आगंतुक पटल : 9