எரிசக்தி அமைச்சகம்
தில்லி ஐஐடி-ன்மின்துறையில் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான திறன் மேம்பாட்டு மையம் தொடங்கப்பட்டது
प्रविष्टि तिथि:
19 JAN 2026 2:01PM by PIB Chennai
தில்லி ஐஐடி-ன் மின்துறையில் ஒழுங்குமுறை விவகாரங்களுக்கான திறன் மேம்பாட்டு மையத்தை மத்திய மின் துறை அமைச்சர் திரு மனோகர் லால் தொடங்கி வைத்தார். தில்லி ஐஐடி, மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இந்திய மின்வழித்தட கட்டுப்பாட்டு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து நிறுவப்பட்டுள்ள இம்மையம் அதிகரித்து வரும் மின் தேவை, பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஒருங்கிணைப்பு, விரிவடைந்து வரும் மின்சந்தைகள், மின்னணு தொழில் நுட்பங்களின் பயன்பாடு அதிகரிப்பு ஆகியவற்றல் வகைப்படுத்தப்படும் விரைவாக வளர்ச்சி அடைந்து வரும் மின்சாரத்துறையில் இந்தியாவின் ஒழுங்குமுறைத் திறனை வலுப்படுத்துவதில் இது முக்கிய படியாகும்.
இந்த சிறப்பு மையம், ஒழுங்குமுறை ஆராய்ச்சி, திறன் மேம்பாடு, ஆலோசனை உதவி மற்றும் அறிவுசார் பரிமாற்றம் ஆகியவற்றுக்கான ஒரு தேசிய அளவிலான மையமாகச் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையத்தை ஒரு முதன்மை கல்வி நிறுவனத்திற்குள் அமைப்பதன் மூலமும், தேசிய மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கும் அமைப்பு இயக்குநருக்கும் இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் இதை நிலைநிறுத்துவதன் மூலமும், இந்த முயற்சி கொள்கை, ஒழுங்குமுறை, அமைப்பு செயல்பாடுகள், கல்விசார் ஆராய்ச்சி ஆகியவற்றை ஒரே நிறுவனக் கட்டமைப்புக்குள் ஒன்றிணைக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=2216045®=3&lang=1
***
TV/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2216164)
आगंतुक पटल : 12