பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக சுமார் 10,000 சிறப்பு விருந்தினருக்கு அழைப்பு

प्रविष्टि तिथि: 19 JAN 2026 2:30PM by PIB Chennai

புதுதில்லி கடமைப் பாதையில் 2026 ஜனவரி 26 அன்று நடைபெறவுள்ள 77-வது குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்வையிடுவதற்காக பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 10,000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வருவாய் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தின் சிறந்த நடைமுறைகளை மேற்கொண்டவர்கள், சிறந்த புதுமை கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் புத்தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள், அரசின் முன்முயற்சியின் கீழ் சிறந்து விளங்கியவர்கள் உள்ளிட்டோர் விருந்தினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் மக்கள் பங்கேற்பை அதிகரிக்கும் வகையிலும் நாட்டைக் கட்டமைப்பதற்கு சிறந்த பங்களிப்பை மேற்கொண்டவர்களை கௌரவிக்கும் வகையிலும் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

உலக தடகள பாரா சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்றவர்கள், இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தற்சார்பு இயக்கத்தின் கீழ் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள், மக்காச்சோளம் ஆகியவற்றின் சாகுபடிக்காக மானியங்கள் பெற்ற சிறந்த விவசாயிகள், மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட 53 பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் குடியரசுதின அணிவகுப்பை பார்வையிட அழைக்கப்பட்டுள்ளனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216056&reg=3&lang=1

                                      

***

TV/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2216161) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Malayalam