நிதி அமைச்சகம்
அனைவருக்கு காப்பீடு குறித்த உச்சிமாநாடு
प्रविष्टि तिथि:
19 JAN 2026 2:11PM by PIB Chennai
அனைவரையும் உள்ளடக்கிய காப்பீட்டு திட்டத்தை வரும் 2047-ம் ஆண்டிற்குள் செயல்படுத்துவதற்கான அவசியத்தை, நிதிசார் சேவைகள் துறை செயலர் திரு நாகராஜு வலியுறுத்தியுள்ளார்.
மும்பையில் மறுகாப்பீடு தொடர்பான சர்வதேச உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், இந்தியாவில் காப்பீட்டு துறையின் வளர்ச்சியை விரிவாக எடுத்துரைத்தார்.
2025 – 25-ம் நிதியாண்டில் காப்பீட்டுத் துறையில் 11.93 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பிரீமியத்தொகை மற்றும் 74.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து மேலாண்மையுடன் இந்திய காப்பீட்டுத் துறை வளர்ச்சி கண்டுள்ளதாக அவர் கூறினார்.
இந்தியாவில் மறுகாப்பீட்டுத் துறையில் விரைவான வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், அனைவருக்கும் காப்பீடு என்ற தொலைநோக்கு பார்வையை, வரும் 2047-ம் ஆண்டிற்குள் செயல்படுத்துவது குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான பொருளாதார இலக்குகளை எட்டுவதற்கு காப்பீடு மற்றும் மறுகாப்பீடு திட்டங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் கூறினார்.
146 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாடுகளில் சவாலான சூழல்கள் இருந்தபோதிலும், இந்தியா வலிமையான நாடாக உருவெடுத்து வருவதாக அவர் கூறினார். நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், உலகளவில் விரைவான பொருளாதார வளர்ச்சி கண்டுவரும் நாடாக இந்தியா திகழ்கிறது என்றும் திரு நாகராஜூ கூறினார்.
***
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2216048®=3&lang=1
TV/SV/LDN/SH
(रिलीज़ आईडी: 2216149)
आगंतुक पटल : 16