இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதலின் 57-வது வார நிகழ்வு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது
குஜராத்தில் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மிதிவண்டி ஓட்டும் நிகழ்வில் பங்கேற்றார் - ஹைதராபாத்தில் மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி பங்கேற்பு
प्रविष्टि तिथि:
18 JAN 2026 4:47PM by PIB Chennai
நாடு முழுவதும் இன்று (18.01.2026) காலை உடல் திறன் இந்தியா (ஃபிட் இந்தியா) இயக்கத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு நடைபெற்றது. குஜராத்தின் ராஜ்கோட் அருகே உள்ள கோண்டலில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மண்டவியா தலைமை வகித்தார். இந்த நிகழ்வில் 250 மிதிவண்டி ஓட்டுபவர்கள் உற்சாகமாகப் பங்கேற்றனர். இந்தியாவை ஆரோக்கியமாக மாற்ற, ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று திரு மன்சுக் மண்டவியா கேட்டுக் கொண்டார். மிதிவண்டி ஓட்டுதல் அனைத்து வயதினருக்கும் சிறந்த பயிற்சியாகும் என அவர் குறிப்பிட்டார். இது சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் உதவுகிறது என அவர் தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த நிகழ்வு மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் தெலங்கானா விளையாட்டு ஆணையத்தின் தலைவர் திரு சிவசேனா ரெட்டி, பேட்மிண்டன் வீரர் புல்லேலா கோபிசந்த், அர்ஜுனா விருது பெற்ற துப்பாக்கி சுடும் வீராங்கனை ஈஷா சிங், பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற தீப்தி ஜீவன்ஜி, உட்பட பல முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய திரு ஜி. கிஷன் ரெட்டி, அன்றாட வாழ்வில் உடற்தகுதியை மேம்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற முயற்சிகள், ஆரோக்கியமான, சுறுசுறுப்பான சமூகத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். ஆரோக்கியமான இந்தியா என்பது நமது பிரதமர் திரு நரேந்திர மோடியின் இறுதி லட்சியம் எனவும் அதை அடைய இது போன்ற முயற்சிகள் உதவும் என்றும் திரு கிஷன் ரெட்டி குறிப்பிட்டார்.
நாடு முழுவதும் கடந்த 57 வாரங்களாக நடைபெற்று வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மிதிவண்டி ஓட்டும் நிகழ்வு மக்கள் இயக்கமாக வளர்ச்சியடைந்துள்ளது. இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று மிதிவண்டி ஓட்டியுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215833®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2215898)
आगंतुक पटल : 7