பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த தினத்தில், அவருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

प्रविष्टि तिथि: 17 JAN 2026 10:17AM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடிதமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) பிறந்த தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.

இது தொடர்பாக பிரதமர் விடுத்துள்ள அறிக்கையில்எம்.ஜி.ஆரின் தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார மேம்பாட்டில் அவரது மகத்தான பங்களிப்பு குறித்தும்தமிழ் கலாச்சாரத்தை உலக அரங்கிற்குக் கொண்டு சென்றதில் அவரது சீரிய முயற்சிகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

தனித்துவமிக்க பண்பு கொண்ட எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக அவர் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. தமிழ் கலாச்சாரத்தைப் பிரபலப்படுத்தியதில் அவரது பங்களிப்பு சமஅளவில் குறிப்பிடத்தக்கது. நமது சமூக முன்னேற்றத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாம் எப்போதும் தொடர்ந்து பணியாற்றுவோம்.”

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215526&reg=3&lang=1

***

TV/SV/SE


(रिलीज़ आईडी: 2215544) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam , Malayalam