உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா புது தில்லியில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் விழா 2026-ல் உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 16 JAN 2026 4:56PM by PIB Chennai

மத்திய உள்துறை மங கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச பட்டம் விடும் விழா 2026 இல் உரையாற்றினார். இந்த நிகழ்வில், தில்லி துணை நிலை ஆளுநர் திரு வினய் குமார் சக்சேனா மற்றும் முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு அமித் ஷா, நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும், குறிப்பாக விவசாயிகளுக்கு, மகர சங்கராந்தி, பொங்கல், லோஹ்ரி, மாக் பிஹு மற்றும் உத்தராயண் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். நமது பருவகால சுழற்சியும், வாழ்க்கையும் எல்லையற்ற சக்தி மூலமான சூரியக் கடவுளைச் சார்ந்திருப்பதால், இந்தப் பண்டிகைகள் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்படுகின்றன என்று அவர் கூறினார். பண்டிகைகள் மூலம், முழு சமூகத்தையும் ஒன்றிணைத்து ஒன்றாக முன்னேற  முயல்கிறோம், மேலும் உத்தராயணம் அந்த உணர்வின் ஒரு பகுதியாகும்.

மகர சங்கராந்தி பண்டிகை 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்பதற்கு ஒரு வாழும் உதாரணமாக மாறியுள்ளது என்று மத்திய அமைச்சர் கூறினார்.  சூரிய பகவான் தனது திசையை மாற்றிக் கொண்டிருக்கிறார் என்றும், இந்த மாற்றம் உலகம் முழுவதும் வரவேற்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். பஞ்சாப் மற்றும் ஹரியானாவில், இதை லோஹ்ரி என்றும், தமிழ்நாட்டில் பொங்கல் என்றும், அசாமில் மாக் பிஹு என்றும், மேற்கு வங்கத்தில் பௌஷ் சங்கராந்தி என்றும், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் உத்தராயணம் என்றும், மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில், இது பாரம்பரியமாக கிச்சடி அல்லது சங்கராந்தி கிச்சடி என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்தப் பட்டம் விடும் விழா, அனைத்து மாநிலங்களையும் தில்லியுடன் இணைக்கும் முயற்சியாகும் என்று அவர் கூறினார். வரும் நாட்களில், இந்த விழா தில்லியில் தனக்கென ஒரு சிறப்பு இடத்தை உருவாக்கும் என்றும், நாடு முழுவதும் பட்டம் விடுபவர்கள்  இங்கு வந்து தங்கள் கலையை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கும் என்றும் திரு ஷா கூறினார்.

நாட்டின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் படேல், சுதந்திரத்திற்குப் பிறகு, ஜாம்நகர் ஜாம் சாஹேப் மகாராஜா, கன்ஹையாலால் மானேக்லால் முன்ஷி மற்றும் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இங்கு ஒரு பிரமாண்டமான மற்றும் அற்புதமான ஸ்ரீ சோமநாதர் கோயில் மீண்டும் கட்டப்படும் என்று தீர்மானித்ததாக உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தெரிவித்தார். இன்று, அந்த இடத்தில் ஒரு அற்புதமான மற்றும் பிர்ம்மாண்டமான சோமநாத் கோயில் நிற்கிறது என்றும் அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2215337&reg=3&lang=1

***

TV/BR/SE


(रिलीज़ आईडी: 2215484) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Kannada