உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் அகமதாபாத்தில் 'சாஸ்து சாகித்ய முத்ரானாலயா அறக்கட்டளை' வெளியிட்ட ஆதி சங்கராச்சாரியாரின் தொகுக்கப்பட்ட படைப்புகளின் குஜராத்தி பதிப்பை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டார்

प्रविष्टि तिथि: 15 JAN 2026 5:43PM by PIB Chennai

குஜராத்தின் அகமதாபாத்தில் 'சாஸ்து சாகித்ய முத்ரானாலயா அறக்கட்டளை' வெளியிட்ட ஆதி சங்கராச்சாரியாரின் தொகுக்கப்பட்ட படைப்புகளின் குஜராத்தி பதிப்பை மத்திய உள்துறை மாற்றம் கூட்டுறவுத்துறை  அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு அமித் ஷா, குஜராத்தி மொழியில் ஆதி சங்கராச்சாரியாரின் ஞான சாகர் வெளியிடப்பட்டிருப்பது, குஜராத் வாசகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது என்று கூறினார். குஜராத்தி மொழியில் வெளியிடப்பட்ட ஆதி சங்கராச்சாரியாரின் தொகுக்கப்பட்ட படைப்புகள், குஜராத் இளைஞர்களுக்கு ஒரு பெரிய பொக்கிஷமாக விளங்கும்  என்று அவர் கூறினார். சமஸ்கிருதத்தில் ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய ஞான சாகர், இன்று குஜராத்தி இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது என்றும், வரும் ஆண்டுகளில், நல்ல இலக்கியம் பற்றிய விவாதங்கள் நடைபெறும்போது, 'சாஸ்து சாகித்ய முத்ரானாலயா அறக்கட்டளையின்' முயற்சி நிச்சயமாக அவற்றில் ஒன்றாகக் கருதப்படும் என்றும் திரு ஷா கூறினார்.

ஏராளமான தீய பழக்கவழக்கங்கள் தோன்றியதால், சனாதன தர்மம் குறித்து பல்வேறு சந்தேகங்களும், அச்சங்களும் எழுந்துள்ளன என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். ஆதி சங்கராச்சாரியாரின் நூல்களைத் தொடர்ந்து  படிக்கும்போது, அவர் தனது வாழ்நாளில் அனைத்து சந்தேகங்களையும் அச்சங்களையும் நீக்கி, ஒவ்வொரு ஆட்சேபனை மற்றும் எதிர்வாதத்திற்கும் தர்க்கரீதியான, பகுத்தறிவு ரீதியான பதில்களை வழங்கினார் என்பது தெளிவாகிறது என்று கூறினார்.

குஜராத்தி மொழியில் மொழிபெயர்ப்பு மற்றும் விளக்கவுரை கிடைப்பதால், ஆதி சங்கராச்சாரியார் இயற்றிய 'விவேகசூடாமணி' என்ற நூலை இளைஞர்கள் ஒரு முறையாவது படிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டார். ஆதி சங்கராச்சாரியார் வெறும் கருத்துக்களை மட்டும் முன்வைக்கவில்லை என்றும், அதனுடன், இந்தியாவிற்கு ஒருங்கிணைப்பையும் வழங்கினார் என்று அவர் கூறினார். நாடு முழுவதும் பல முறை பாத யாத்திரை மேற்கொண்ட ஆதி சங்கராச்சாரியார், இந்தியாவிற்கான அடையாளத்தையும் உருவாக்கினார் என்று திரு அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214958&reg=3&lang=1

***

TV/BR/RK


(रिलीज़ आईडी: 2215183) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati , Kannada