பாதுகாப்பு அமைச்சகம்
ராணுவத்தின் அபாரமான துணிச்சல், உயர்ந்த தியாகம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கின்றன: ராணுவ தினத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டு
प्रविष्टि तिथि:
15 JAN 2026 10:20AM by PIB Chennai
இன்று (ஜனவரி 15, 2026) கொண்டாடப்படும் பெருமைமிகு இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு, ராணுவ வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதில் இந்திய ராணுவத்தின் அசாத்திய துணிச்சல், உயர்ந்த தியாகம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு தேசம் மரியாதை செலுத்துவதாகக் கூறியுள்ளார்.
எல்லைகளில் எப்போதும் விழிப்புடன் இருந்து, நெருக்கடியான காலங்களில் உறுதியுடன் செயல்படும் இந்திய ராணுவம், அதன் தொழில்முறை, ஒழுக்கம், மனிதாபிமான சேவை ஆகியவை மூலம் உலகளாவிய மரியாதையைப் பெற்றுள்ளது என்று திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். நவீனத்துவத்துடனும் தற்சார்புடனும் கூடிய எதிர்காலத்திற்குத் தயாரான ராணுவத்தை உருவாக்குவதற்கான அரசின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் எடுத்துரைத்துள்ளார். தேசம் நன்றியுடன் தமது வீரர்களுக்கு ஒன்றுபட்டு் மரியாதை செலுத்துவதாக திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இன்று (15.01.2026) மாலை, ஜெய்ப்பூரில் நடைபெறும் ராணுவ தின கொண்டாட்டங்களில் பாதுகாப்புத் துறை அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214790®=3&lang=1
***
TV/PLM/RK
(रिलीज़ आईडी: 2214998)
आगंतुक पटल : 10