பிரதமர் அலுவலகம்
காசி தமிழ் சங்கமம் குறித்து பிரதமர் தமது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
15 JAN 2026 9:36AM by PIB Chennai
பொங்கல் பண்டிகையின் சிறப்புமிக்க நாளில், பிரதமர் திரு நரேந்திர மோடி, காசி தமிழ் சங்கமத்தின் குறிப்பிடத்தக்க வளர்ச்சி குறித்த தமது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையைக் கொண்டாடும் வகையில், பாரம்பரியங்கள், மொழிகள், சமூகங்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில், கலாச்சார பரிமாற்றத்திற்கான துடிப்பான தளமாக இந்த முயற்சி எவ்வாறு மாறியுள்ளது என்பதை அவர் எடுத்துரைத்துள்ளார்.
சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவின் ஒரு பகுதியாக சோம்நாத்திற்கு சமீபத்தில் தாம் சென்றபோது, காசி தமிழ் சங்கமம், சௌராஷ்டிரா தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளுக்கு மக்கள் பாராட்டுத் தெரிவித்ததாகப் பிரதமர் கூறியுள்ளார். காசி தமிழ் சங்கமம் தொடர்பாக தமது எண்ணங்களை வெளிப்படுத்தும் வகையில் தாம் எழுதிய கட்டுரையின் இணையதள இணைப்பையும் பிரதமர் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது :
"சோம்நாத் சுயமரியாதைப் பெருவிழாவை முன்னிட்டு அண்மையில் நான் சோம்நாத்திற்குச் சென்றிருந்தபோது, நான் சந்தித்த மக்கள், காசி தமிழ் சங்கமம், சௌராஷ்ட்ர தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகளைப் பாராட்டினார்கள். இன்று சிறப்புமிக்க பொங்கல் பண்டிகையின் போது, காசி தமிழ் சங்கமத்தின் வளர்ச்சி குறித்தும், 'ஒரே பாரதம் உன்னத பாரதத்தின்' உணர்வை அது எவ்வாறு வலுப்படுத்துகிறது என்பது பற்றியும் எனது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளேன்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214775®=3&lang=1
***
AD/PLM/RK
(रिलीज़ आईडी: 2214871)
आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Malayalam