குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பொங்கல், மகர சங்கராந்தி, லோஹ்ரி, மாக் பிஹு, கனுமா, உத்தராயன், துசு பரப் மற்றும் இதர அறுவடை பண்டிகைகளை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
13 JAN 2026 6:40PM by PIB Chennai
பொங்கல், மகர சங்கராந்தி, லோஹ்ரி, மாக்பிஹு, கனுமா, உத்தராயண், துசு பராப் மற்றும் நாடு முழுவதும் கொண்டாடப்படும் இதர அறுவடை பண்டிகைகளை முன்னிட்டு நமது விவசாய சமூகம் உட்பட எனது சகோதர சகோதரிகளுக்கு, எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களிலும் பழக்கவழக்கங்களிலும் கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைகள், பருவநிலை மாற்றம், சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் மற்றும் பல மாத அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பின் மூலம் வளர்க்கப்பட்ட பயிர்களின் அறுவடை ஆகியவற்றைக் குறிக்கின்றன. இவை ஒன்றாக, வேளாண்மை மற்றும் இயற்கையுடனான இந்தியாவின் நீடித்த நாகரிகப் பிணைப்பைப் பிரதிபலிப்பதுடன், நமது வளமான பன்முகத்தன்மையை அடிப்படையாகக் கொண்ட ஒற்றுமையை எடுத்துக்காட்டுகின்றன.
“சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.”
என்ற குறள் மூலம், வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், உழவர்களின் கண்ணியத்தையும் போற்றிய திருவள்ளுவரின் ஆழ்ந்த ஞானத்தை இந்த பருவம் எனக்கு நினைவூட்டுகிறது.
எவ்வளவுதான் முன்னேற்றங்கள் இருந்தாலும், உலகம் இறுதியில் வேளாண்மையைச் சார்ந்தும், விவசாயத்தை முதன்மையானதாகவும் ஆக்குகிறது என்பதை காலவரையறைக்கு உட்படாத இந்த சீர்கள் உறுதிப்படுத்துகின்றன.
இந்தியாவின் வேளாண் பாரம்பரியம் அதன் பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் சமூக வாழ்க்கையின் அடித்தளமாக இருந்து வருகிறது.
விவசாயத்தை வலுப்படுத்தவும், உழவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் இந்தியா தொலைநோக்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வருமான பாதுகாப்பை உறுதி செய்தல், நிறுவன கடன்களை விரிவுபடுத்துதல், மண் வளம் மற்றும் நீர்ப்பாசனத்தை மேம்படுத்துதல், பயிர் காப்பீட்டை ஊக்குவித்தல், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் சந்தை அணுகலை மேம்படுத்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள், விவசாயிகளுக்கு அதிகாரம் வழங்கி, விவசாயத்தை மேலும் மீள்தன்மையுடனும் நிலையானதாகவும் மாற்ற உதவியுள்ளன. இந்த முயற்சிகள் விவசாயிகளை வளர்ச்சியின் மையத்தில் இடம்பெறச்செய்யவும், இந்தியாவின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்தின் ஒரு ஆதாரமாக விவசாயத்தை அங்கீகரிப்பதற்குமான நாட்டின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.
இந்தப் புனித தருணத்தில், நமது விவசாய சமூகங்களை ஆதரிப்பதற்கும், கலாச்சார மரபுகளைப் பாதுகாப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய, மீள்தன்மை கொண்ட மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதற்கும் நமது உறுதியைப் புதுப்பிப்போம்.
அனைத்து குடிமக்களும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214243®=3&lang=1
(Release ID: 2214243)
****
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2214354)
आगंतुक पटल : 29