நிதி அமைச்சகம்
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் உறுதி செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்பை உருவாக்க நிபுணர் குழுவை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
प्रविष्टि तिथि:
13 JAN 2026 1:40PM by PIB Chennai
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் உறுதி செய்யப்பட்ட பரிவர்த்தனைகளுக்கான கட்டமைப்பை செயல்படுத்த வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்கும் பணியில் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஓர் உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது. இந்த நடவடிக்கை ஆணையச் சட்டத்தின் விதிகளுடன் ஒத்துப்போகிறது; சந்தாதாரர்களுக்கான ஓய்வூதிய வருவாயின் பாதுகாப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தக் குழுவிற்கு டாக்டர் சாஹூ ஒழுங்குமுறை அமைப்புகளின் நிறுவனரும் இந்திய திவால் மற்றும் நொடித்துப்போதல் வாரியத்தின் முன்னாள் தலைவரான டாக்டர் எம்.எஸ். சாஹூ தலைமை தாங்குவார். 15 பேர் கொண்ட குழுவில் சட்டம், கணக்கு வழக்கு, நிதி, காப்பீடு, மூலதன சந்தைகள், கல்வித்துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த பல்வேறு நிபுணர்கள் உள்ளனர். மேலும், விரிவான விவாதத்தை உறுதி செய்ய, கருத்து மற்றும் ஆலோசனைக்காக வெளிப்புற நிபுணர்கள் அல்லது இடைத்தொடர்பாளர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்க குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214087®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2214330)
आगंतुक पटल : 16