இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உத்வேகமிக்க புதுமை கண்டுபிடிப்பாளர்கள் – புதிய இந்தியா, புதிய அடையாளம் என்ற திறன் மேம்பாட்டு திட்டத்தின் நிறைவு நிகழ்ச்சி புதுதில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 13 JAN 2026 5:05PM by PIB Chennai

படைப்பு சமத்துவத்திற்கான நெட்ஃபிளிக்ஸ் நிதியத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட உத்வேகமிக்க புதுமை கண்டுபிடிப்பாளர்கள் – புதிய இந்தியா, புதிய அடையாளம் என்ற திறன் மேம்பாட்டு திட்டத்தின் நிறைவைக் குறிக்கும் நிகழ்ச்சி 2026 ஜனவரி 13 அன்று புதுதில்லியில் நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், தகவல் ஒலிபரப்புத்துறைச் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ. நெட்ஃபிளிக்ஸ் கிராஃபிட்டி ஸ்டுடியோ குழுவினர் புதுமை கண்டுபிடிப்பாளர்கள், மாணவர்கள், ஆகியோருடன் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் அவர்களும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, புதுமை கண்டுபிடிப்புகளின் சமூகப் பயன்களை திறம்பட வெளிப்படுத்திய உத்வேகமளிக்கும் புதுமை கண்டுபிடிப்பாளர்களின் முன்முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்தார். சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மீன்வளம், வேளாண் துறைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 8 புதுமை கண்டுபிடிப்பாளர்களின் சாதனைகளையும் கருத்துக்களையும் எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214177&reg=3&lang=1

------

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2214248) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Kannada