கனரகத் தொழில்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கனகரகத் தொழில்கள் அமைச்சகத்தின் 2025-ம் ஆண்டின் செயல்பாடுகள்

प्रविष्टि तिथि: 13 JAN 2026 11:04AM by PIB Chennai

ஆட்டோமொபைல் மற்றும் ஆட்டோ உதிரிபாகங்கள் துறைக்கு ரூ. 25,938 கோடி பட்ஜெட் ஒதுக்கீட்டில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது, மேம்பட்ட ஆட்டோமொடிவ் தொழில்நுட்ப தயாரிப்பில் இந்தியாவின் உற்பத்தித் திறன்களை மேம்படுத்துதல், செலவுக் குறைபாடுகளை சமாளித்தல், வலுவான விநியோகத் தொடரை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. 15.09.2021-ல்    அங்கீகரிக்கப்பட்ட இந்தத் திட்டம், 2023-24 நிதியாண்டு முதல் 2027-28 நிதியாண்டு வரையிலான காலகட்டத்தை உள்ளடக்கியது. இந்தத் திட்டம் மின்சார வாகனம் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் கூறுகளுக்கு 13%-18% மற்றும் பிற ஆட்டோமொடிவ் தொழில்நுட்ப தயாரிப்புக் கூறுகளுக்கு 8%-13% ஊக்கத்தொகை வழங்குகிறது. இதில் ரூ. 42,500 கோடி முதலீட்டுடன் 82 அங்கீகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் உள்ளனர்.  இதன் மூலம் ரூ.2,31,500 கோடி விற்பனை அதிகரித்துள்ளது.  ஐந்து ஆண்டுகளில் 1.48 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தின் கீழ், 31.12.2025 வரை, மொத்தம் 13,61,488 அலகுகளுக்கு (அதாவது 10,42,172 மின்சார இரு சக்கர வாகனங்கள், 2,38,385 மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 79,540 மின்சார நான்கு சக்கர வாகனங்கள், 1,391 மின்சாரப் பேருந்துகள் ஆகியவற்றுக்கு)  ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டம் குறைந்தபட்சம் 50% உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அடையும் தயாரிப்புகளுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்குகிறது.

பிஎம் இ-டிரைவ் திட்டம் 29.09.2024-ல் ரூ.10,900 கோடி செலவில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் காலம் தொடக்கத்தில் இரண்டு ஆண்டுகளாக, அதாவது 01.04.2024 முதல் 31.03.2026 வரை இருந்தது. பின்னர் 31.03.2028 வரை நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், மின்சார இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களுக்கான இறுதி தேதி 31.03.2026 ஆகவே தக்கவைக்கப்பட்டுள்ளது.

28 லட்சத்திற்கும் அதிகமான மின்சார வாகனங்களை ஊக்குவிப்பதற்கான மானியங்களுக்காக ரூ.3,679 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 24.79 லட்சம் மின்சார இரு சக்கர வாகனங்கள், இ-ரிக்‌ஷாக்கள், இ-வண்டிகள் உட்பட 3.28 லட்சம் மின்சார மூன்று சக்கர வாகனங்கள், 5,643 இ-டிரக்குகள் அடங்கும்.  பொது போக்குவரத்து நிறுவனங்களால் 14,028 மின் பேருந்துகளை இயக்க ரூ.4,391 கோடி; போதிய எண்ணிக்கையில் பொது சார்ஜிங் நிலையங்களை அமைக்க ரூ.2,000 கோடி; சோதனை நிறுவனங்களை மேம்படுத்துவதற்கு ரூ.780 கோடி மற்றும் நிர்வாகச் செலவுகளுக்கு ரூ.50 கோடி ஆகியவையும் ஒதுக்கீட்டில் அடங்கும்.

மத்திய கனரகத் தொழில்கள் மற்றும் எஃகுத்துறை அமைச்சர் திரு எச்.டி. குமாரசாமி, பிரதமர் மின்-இயக்கத்தின் கீழ் மின்-டிரக்குகளை ஊக்குவிக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். நாட்டின் தூய்மையான மற்றும் நிலையான சரக்குப் போக்குவரத்துக்கு மாறுவதற்கு உதவும் வகையில், மின்சார லாரிகளுக்கான ஆதரவை மத்திய அரசு தொடங்குவது இதுவே முதல் முறையாகும்.

கனரக தொழில்துறை அமைச்சகத்தின் இந்தி இதழான "உத்யோக் பாரதி"யின் இரண்டாம் பதிப்பை மத்திய இணையமைச்சர் திரு பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா வெளியிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2214039&reg=3&lang=1

**

AD/SMB/PD


(रिलीज़ आईडी: 2214092) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Kannada