மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மீன் உற்பத்தி 106 சதவீதம் அதிகரித்துள்ளது
प्रविष्टि तिथि:
12 JAN 2026 9:24AM by PIB Chennai
இந்திய பொருளாதாரத்தில் மீன்வளத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. 3 கோடி மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வரும் இத்துறை வேலைவாய்ப்பு உருவாக்கத்திலும் முக்கிய பங்களிப்பை வழங்கி வருகிறது. உலகின் மொத்த மீன் உற்பத்தியில் 8 சதவீதம் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுவதன் மூலம் உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக இந்தியா திகழ்ந்து வருகிறது.
மீன் உற்பத்தியையும் மீன் வளர்ப்புத்தொழிலையும் மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு மத்திய அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் 38,572 கோடி ரூபாய் அளவிற்கு இத்துறையில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2014-15 ஆம் ஆண்டு முதல் இத்துறையின் மேம்பாட்டிற்கு 32,723 கோடி ரூபாய் அளவிற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, நீலப்புரட்சி, மீன்வளக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம், பிரதமரின் மீன்வள மேம்பாட்டுத் திட்டம், பிரதமரின் மீன்வளம் மற்றும் மீன் விவசாயிகள் நல கூட்டுறவுத் திட்டம் ஆகியவற்றையும் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2018-19 ஆம் நிதியாண்டில் விவசாயிகள் கடன் அட்டை (KCC) வசதி மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன் மூலம் இந்த அட்டை வைத்துள்ள 4.49 லட்சம் மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு 3569 கோடி ரூபாய் அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.
அரசின் இத்தகைய சீரிய நடவடிக்கைகளின் பலனாக 2013-14 ஆம் நிதியாண்டில் 95.79 லட்சம் டன்னாக இருந்த மீன் உற்பத்தி 2024-25 ஆம் நிதியாண்டில் 106 சதவீதம் அதிகரித்து 197.75 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213532®=3&lang=1
(Release ID: 2213532)
TV/PD/PD
(रिलीज़ आईडी: 2213666)
आगंतुक पटल : 13