குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
சுவாமி விவேகானந்தரின் பிறந்ததினத்தையொட்டி குடியரசு துணைத் தலைவர் மரியாதை செலுத்தினார்
प्रविष्टि तिथि:
12 JAN 2026 11:05AM by PIB Chennai
இந்தியாவின் சிறந்த ஆன்மீக ஒளிவிளக்காக திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளையோர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்நாளையொட்டி புதுதில்லியில் உள்ள குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அன்னாரது உருவப் படத்திற்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ்தளத்தில் குடியரசு துணைத் தலைவர் பதிவிட்டிருப்பதாவது:
“இந்தியாவின் சிறந்த ஆன்மீக ஒளிவிளக்காக திகழ்ந்த சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம் தேசிய இளையோர் தினமாக கொண்டாடப்படுவதையொட்டி, குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் அன்னாருக்கு மரியாதை செலுத்தினேன்.
சுவாமிஜியின் வாழ்க்கையும் போதனைகளும், மன வலிமை, சுய ஒழுக்கம், தன்னலமற்ற சேவை ஆகியவற்றை ஒரு அர்த்தமுடைய வாழ்வின் தூண்களாக வலியுறுத்தின. சுவாமி விவேகானந்தர், இந்தியாவின் நாகரீக அறிவை உலகிற்கு கொண்டு சென்றதன் வாயிலாக தேசியப் பெருமையை நிலைநாட்டி, நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபட இளைஞர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தினார்.
சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் வருங்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்”.
***
(Release ID: 2213566)
TV/IR/LDN/PD
(रिलीज़ आईडी: 2213645)
आगंतुक पटल : 11