PIB Headquarters
azadi ka amrit mahotsav

தேசிய இளைஞர் தினம் 2026

प्रविष्टि तिथि: 11 JAN 2026 4:29PM by PIB Chennai

"இளைஞர்களின் சக்தியே உலகம் முழுவதற்கும் பொதுவான செல்வம்." என்று கூறினார் சுவாமி விவேகானந்தர். ஒவ்வொரு ஆண்டும் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அவரது கருத்துக்கள் இளம் இந்தியர்களை தொடர்ந்து ஊக்குவிக்கின்றன. தேசிய இளைஞர் தினம் என்பது இந்திய இளைஞர்களின் எதிர்பார்ப்புகள், ஆற்றல், பொறுப்புகள் பற்றி சிந்திக்க ஒரு தருணம். இளைஞர்கள் 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை நோக்கிய பயணத்தின் முதுகெலும்பாக திகழ்கின்றனர்.

இந்தியாவின் மக்கள்தொகையில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் 35 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதால் , இளைஞர்களின் பலம் மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. இதை அங்கீகரித்து, மத்திய அரசு இளைஞர் பங்கேற்பு, திறன் மேம்பாடு, தொழில்முனைவு, சுகாதாரம் ஆகியவற்றை உள்ளடக்கிய, இளைஞர்களுக்கான விரிவான சூழல் அமைப்பை உருவாக்கியுள்ளது.

இளைஞர் நலத்துறை அமைச்சகத்தின் தலைமையில், அமைச்சகங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு மூலம் வலுப்படுத்தப்பட்ட கட்டமைப்பானது, இளம் இந்தியர்களை வளர்ச்சியின் பயனாளிகளாக மட்டுமல்லாமல், தேசத்தைக் கட்டியெழுப்புவதில் தீவிர பங்கேற்பாளர்களாகவும் செயல்பட வைக்க முயல்கிறது.

இளைஞர் ஈடுபாடு : மை பாரத் தளம், நாட்டு நலப்பணித் திட்டம் போன்றவை தன்னார்வத் தொண்டு, தலைமைத்துவம் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்கேற்பை அதிகரிக்கின்றன.

கல்வி, வேலைவாய்ப்பு திட்டங்கள் : திறன் இந்தியா, பிஎம்கேவிஒய், பிஎம்-சேது, அக்னிபத், ஸ்டார்ட்அப் இந்தியா உள்ளிட்ட முதன்மை முயற்சிகள், திறன் வளர்ப்பிலிருந்து வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்முனைவு வரையிலான பாதைகளை வலுப்படுத்துகின்றன.

உடல்நலம் மற்றும் நல்வாழ்வு : ஃபிட் இந்தியா போன்ற திட்டங்கள் இளைஞர்களின் உடற்பயிற்சி, மன ஆரோக்கியம் மற்றும் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கைக்கான முழுமையான அணுகுமுறையை ஊக்குவிக்கின்றன.

இந்த ஆண்டு தேசிய இளைஞர் தினத்தை கொண்டாடும் வேளையில், ஒரு செய்தி தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் எதிர்காலம் கொள்கைகளால் மட்டுமல்லாமல், அதன் இளைஞர்களின் ஆற்றல், புதுமை மற்றும் அர்ப்பணிப்பால் வடிவமைக்கப்படுகிறது என்பதே அது.  இளம் இந்தியர்கள் தேசிய மாற்றத்தின் கதையில் தீவிரமாக பங்கேற்கின்றனர்.

மத்திய அரசு இளைஞர்களுக்கு ஏற்ற சிறந்த சூழலை வளர்த்து வருகிறது. மன ஆரோக்கியம், உடல் தகுதி, சமூக நல்வாழ்வு ஆகியவற்றுக்கு சமமான முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், வளர்ச்சிப் பயணம் நிலையானதாகவும் உள்ளடக்கியதாகவும் இருப்பது உறுதி செய்யப்படுகிறது.

இந்தியா 2047-ம் ஆண்டை நோக்கி முன்னேறும்போது, அதன் இளைஞர்கள் எதிர்காலத்தை நிர்மாணிக்குத் வடிவமைப்பாளர்களாக உள்ளனர். சுவாமி விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு கொண்டாடப்படும் இந்த தேசிய இளைஞர் தினம், தேசத்தை கட்டியெழுப்புதல் என்பது கூட்டு நடவடிக்கைகளில் அமைந்துள்ளது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://www.niti.gov.in/sites/default/files/2025-04/Working%20Paper%20on%20Strategic%20Imperatives_04042025_NEW.pdf

https://www.pib.gov.in/Pressreleaseshare.aspx?PRID=1795442

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2140894

https://nss.gov.in/about-us-

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154537&ModuleId=3

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154880&ModuleId=3

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=154880&ModuleId=3

https://www.msde.gov.in/offerings/schemes-and-services/details/jan-shikshan-sansthan-jss-cjM4ATMtQWa

https://yas.gov.in/sites/default/files/Draft%20NYP-2025.pdf

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2184456&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197018&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200500&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212609&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2174394&utm_source=chatgpt.com&reg=3&lang=2

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200373&reg=3&lang=1

https://www.pib.gov.in/PressReleaseIframePage.aspx?PRID=2100845&reg=3&lang=2#:~:text=The%20Union%20Cabinet%20has%20approved%20the%20continuation,(PM%2DNAPS)%20*%20Jan%20Shikshan%20Sansthan%20(JSS)%20Scheme

https://www.mygov.in/campaigns/fit-india/

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213415&reg=3&lang=1

***

TV/PLM/RK


(रिलीज़ आईडी: 2213472) आगंतुक पटल : 62
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati