நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
உணவகங்களால் கட்டாய சேவைக் கட்டணம் வசூலிப்பது நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை மீறுவதாகும்: மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்
प्रविष्टि तिथि:
10 JAN 2026 4:05PM by PIB Chennai
நுகர்வோர் உரிமைகளை மீறியதற்காகவும், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொண்டதற்காகவும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 27 உணவகங்களுக்கு எதிராக, சேவைக் கட்டணம் கட்டாயமாக வசூலிப்பது தொடர்பாக, 2019-ம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2(47)-ன் கீழ், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
சேவைக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட வழிகாட்டுதல்களை உறுதிசெய்தும், உணவகங்களால் கட்டாயமாக சேவைக் கட்டணம் வசூலிப்பது சட்டத்திற்கு முரணானது என்றும் 2025 , மார்ச் 28 அன்று தில்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எந்த ஒரு உணவகமும் உணவுக் கட்டணத்தில் சேவைக் கட்டணத்தைச் சேர்க்கக்கூடாது.
வேறு எந்தப் பெயராலும் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படக்கூடாது.
சேவைக் கட்டணம் செலுத்த நுகர்வோரை நிர்பந்திக்கப்படக்கூடாது. அது தன்னார்வமானது, தன் விருப்பமானது என்பதைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
சேவைக் கட்டணம் செலுத்த மறுப்பதன் அடிப்படையில் சேவைகளை வழங்குவதில் அல்லது உள்ளே செல்வதில் எந்தத் தடையும் விதிக்கப்படக்கூடாது.
சேவைக் கட்டணம் பில் தொகையில் சேர்க்கப்படக் கூடாது மற்றும் ஜிஎஸ்டிக்கு உட்பட்டது என 2022, ஜூலை 4 அன்று மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வழிகாட்டுதல்களை வெளியிட்டிருந்தது.
பாட்னாவில் உள்ள கஃபே ப்ளூ பாட்டில், மும்பையில் உள்ள சைனா கேட் ரெஸ்டாரன்ட் பிரைவேட் லிமிடெட் (போரா போரா) உள்ளிட்ட பல உணவகங்கள், 2019-ம் ஆண்டின் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்களைத் தெளிவாக மீறும் வகையில், தானாகவே 10% சேவைக் கட்டணத்தை வசூலிப்பது விசாரணையில் தெரியவந்தது.
கஃபே ப்ளூ பாட்டில் உணவகத்திற்கு ரூ. 30,000, சைனா கேட் ரெஸ்டாரன்ட் பிரைவேட் லிமிடெட் (போரா போரா) உணவகத்திற்கு ரூ. 50,000 என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213227®=3&lang=2
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2213277)
आगंतुक पटल : 18