PIB Headquarters
சோம்நாத் சுயமரியாதை விழா: ஆயிரம் ஆண்டுகாலம் ஆழமாக வேரூன்றியுள்ள நம்பிக்கையும் நாகரிகப் பெருமையும்
प्रविष्टि तिथि:
10 JAN 2026 9:42AM by PIB Chennai
1026 ஜனவரியில் சோம்நாதர் ஆலயத்தின் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதலின் ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் தேசிய நினைவேந்தல் நிகழ்வாக, சோம்நாத் சுயமரியாதை விழா 2026, ஜனவரி 8 முதல் 11 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, அழிவின் நினைவாக அல்லாமல், மீள்திறன், நம்பிக்கை மற்றும் நாகரிக சமூகத்தின் சுயமரியாதைக்கான ஒரு பெருமையாகக் கருத்தாக்கம் செய்யப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக, பக்தியை விட அழிப்பையே நோக்கமாகக் கொண்ட படையெடுப்பாளர்களால் சோமநாதர் ஆலயம் மீண்டும் மீண்டும் குறிவைக்கப்பட்டது.
இருப்பினும், ஒவ்வொரு முறையும், தேவி அஹில்யா பாய் ஹோல்கர் போன்ற பக்தர்களின் கூட்டானத் தீர்மானத்தின் மூலம் கோயில் மீண்டும் கட்டப்பட்டது. இந்த இடைவிடாத மறுமலர்ச்சியின் சுழற்சி தொடர்ச்சியான இந்திய நாகரிகத்தின் சக்திவாய்ந்த அடையாளமாக சோம்நாத்தை மாற்றியுள்ளது.
சுதந்திரத்திற்குப் பின் 1951 மே 11 அன்று தற்போதைய சோமநாதர் ஆலயம் பக்தர்களுக்கு மீண்டும் திறக்கப்பட்டதன் எழுபத்தைந்தாவது ஆண்டினையும் 2026 ஆம் ஆண்டு குறிக்கிறது. இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளும் சோம்நாத் சுயமரியாதை விழாவிற்கு அடித்தளங்களாக அமைகின்றன.
நான்கு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் போது, ஆன்மீகச் செயல்பாடு, கலாச்சார சிந்தனை மற்றும் தேசிய நினைவுகளின் மையமாக சோமநாத் மாறியிருக்கும். ஒற்றுமை மற்றும் கூட்டு நம்பிக்கையின் அடையாளமாக 72 மணி நேரத்திற்கு அகண்ட ஓம்கார மந்திரம் பாராயணம் நிகழ்வு இந்தக் கொண்டாட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும். இதற்கு இணையாக, கோயில் நகரம் முழுவதும் பக்தி இசை நிகழ்ச்சிகள், ஆன்மீகச் சொற்பொழிவுகள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
சோம்நாத் சுயமரியாதை விழா, இந்தியாவின் காலத்தால் அழியாத நாகரிகப் பயணத்தின் மீதான பெருமை, நினைவு மற்றும் நம்பிக்கையின் கூட்டு வெளிப்பாடாகத் திகழ்கிறது.
2026, ஜனவரி 8 முதல் 11 வரை பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவிருப்பதால், சோம்நாத் சுயமரியாதை விழா தேசிய முக்கியத்துவம் பெறுகிறது.
2026 ஜனவரி 10 அன்று சோம்நாத்தில் சுயமரியாதை விழாவைக் குறிக்கும் முக்கிய ஆன்மீக நிகழ்வுகளில் பிரதமர் பங்கேற்க உள்ளார். நம்பிக்கை, ஒற்றுமை மற்றும் நாகரிக வலிமையின் தொடர்ச்சியை அடையாளப்படுத்தும் வகையில் கோயில் வளாகத்தில் மாலையில் தொடர்ந்து 72 மணி நேரம் நடைபெறும் ஓம்கார மந்திரம் பாராயணம் நிகழ்வில் அவர் கலந்துகொள்வார். அதே நாள் மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ட்ரோன் நிகழ்ச்சியையும் பிரதமர் பார்வையிடுவார்.
2026 ஜனவரி 11 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'வீர யாத்திரை' என்ற அடையாளப் பேரணிக்குப் பிரதமர் தலைமை தாங்குவார். பல நூற்றாண்டுகால இன்னல்களுக்கு இடையேயும் சோம்நாத்தைப் பாதுகாத்த துணிச்சல், தியாகம் மற்றும் அசைக்க முடியாத மன உறுதியை இந்த வீர யாத்திரை பிரதிபலிக்கிறது. இதைத் தொடர்ந்து சோமநாதர் ஆலயத்தில் பிரதமர் வழிபாடு செய்வார்.
பின்னர், சோம்நாத்தில் நடைபெறும் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுவார். அப்போது, அந்த ஆலயத்தின் நாகரிக முக்கியத்துவம், சுயமரியாதை விழாவின் முக்கியத்துவம், சோம்நாத்துடன் தொடர்புடைய நம்பிக்கை, மீள்திறன், சுயமரியாதை ஆகியவற்றின் நீடித்த செய்தியை அவர் எடுத்துரைப்பார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2213128®=3&lang=1
****
TV/SMB/SH
(रिलीज़ आईडी: 2213197)
आगंतुक पटल : 28