இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026

प्रविष्टि तिथि: 08 JAN 2026 7:59PM by PIB Chennai

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இளைஞர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய முயற்சியாக, மத்திய இளைஞர் நலன், விளையாட்டு மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையில், ‘வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026’ (VBYLD 2026) இரண்டாம் பதிப்பு புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் ஜனவரி 9 முதல் 12 வரை நடைபெறுகிறது. 2047-ஆம் ஆண்டிற்குள் ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ என்ற இலக்கை எட்ட இளைஞர்களின் புதுமையான கருத்துக்களையும் தீர்வுகளையும் முன்வைக்க இந்த நிகழ்வு ஒரு தேசியத் தளமாக அமைகிறது.

இதில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் பங்கேற்கின்றனர். இதற்கான முதற்கட்டமாக நடத்தப்பட்ட டிஜிட்டல் வினாடி வினாவில் நாடு முழுவதும் 50 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து கட்டுரைப் போட்டி மற்றும் மாநில அளவிலான போட்டிகள் மூலம் சிறந்த 1,500 இளம் தலைவர்கள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜனநாயகம், மகளிர் தலைமையிலான வளர்ச்சி,புத்தொழில், தற்சார்பு பாரதம் மற்றும் பசுமை இந்தியா போன்ற 10 முக்கியத் தலைப்புகளில் தங்களது யோசனைகளை வழங்க உள்ளனர்.

இந்த ஆண்டு கலாச்சாரப் போட்டிகளுடன், ‘பாரதத்திற்கான வடிவமைப்பு’ மற்றும் சமூக மாற்றத்திற்கான தொழில்நுட்பத் தீர்வுகள் போன்ற புதிய பிரிவுகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் சுமார் 3,000 பங்கேற்பாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212609&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு எண் 2212609

****

TV/VK/SH


(रिलीज़ आईडी: 2213169) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati , Kannada , Malayalam