மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் நடைபெற்ற அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கு மறுவடிவம் தரும் அனைவருக்கும் கல்வி 3.0 கூட்டத்திற்குத் திரு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்

प्रविष्टि तिथि: 09 JAN 2026 5:12PM by PIB Chennai

புது தில்லியில் இன்று நடைபெற்ற  அனைவருக்கும் கல்வி 3.0 குறித்த ஒரு நாள் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய கல்வி அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.

அனைவருக்கும் கல்வி 3.0-க்கான உத்திகள், ஆலோசனை மற்றும் செயல்திட்டத்தை உருவாக்குவதே இந்தக் கூட்டத்தின் நோக்கமாகும். மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் துறைசார் பங்குதாரர்களுடன் மேற்கொள்ளப்படும் கூட்டு விவாதங்கள் மூலம் இது சாத்தியமாகும். திட்டத்தின் அடுத்த கட்டத்தில் நிர்வாகம், உள்கட்டமைப்பு, ஆசிரியர் பயிற்சி மற்றும் மாணவர் உரிமைகளை வலுப்படுத்த தேவைப்படும்  சிறந்த நடைமுறைகள் மற்றும் முன்னுரிமை தலையீடுகள் குறித்து இந்த விவாதங்கள் கவனம் செலுத்தின.

பிரதமர் திரு நரேந்திர மோடி 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையைத் தந்துள்ளார் என்றும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறும்போதும், நாடு பன்னிரெண்டாம் வகுப்பு வரை 100 சதவீத சேர்க்கையை அடையும்போதும் மட்டுமே இதை நனவாக்க முடியும் என்றும் நிகழ்ச்சியில் பேசிய திரு பிரதான் கூறினார். கற்றல் இடைவெளிகளைக் குறைத்தல், இடைநிற்றலைக் குறைத்தல், கற்றல் மற்றும் ஊட்டச்சத்து வழங்கலை மேம்படுத்துதல், ஆசிரியர் திறனை வலுப்படுத்துதல், முக்கியமான திறன்களை வளர்த்தல், மெக்காலே மனநிலையைத் தாண்டி 'அமிர்தத் தலைமுறை'யை முன்னேற்றுதல் ஆகியவை வலுவான மனித மூலதன அடித்தளத்தை உருவாக்குவதற்கான கூட்டுப் பொறுப்புகள் என்பதை அவர் வலியுறுத்தினார்.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் அடுத்த கட்டம் பற்றிக் குறிப்பிட்ட திரு.பிரதான், தேசிய கல்விக் கொள்கை 2020 செயல்படுத்தப்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பின், தேசிய வளர்ச்சி இலக்குகளுடன் இணைந்த கல்வி சீர்திருத்தத்தின் ஒரு புதிய கட்டத்திற்குள் செல்கிறோம் என்றார். 2026–27 கல்வியாண்டிற்கு ஒரு வலுவான, முழுமையான திட்டத்தைத் தயாரித்து, அதை நாடு தழுவிய இயக்கமாக முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைத்துப் பங்குதாரர்களும் ஒன்றிணைய வேண்டும் என்றும், கருத்துகளின் ஒருங்கிணைப்பு கூட்டுத் திறனை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். கல்வி வல்லுநர்கள், துறைசார் அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் உற்சாகமான பங்கேற்பையும்  மதிப்புமிக்க பரிந்துரைகளையும் திரு பிரதான் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212941&reg=3&lang=1

****

TV/SMB/SH


(रिलीज़ आईडी: 2213028) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Odia