குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
இந்திய மொழிகள் நாட்டை ஒருங்கிணைத்ததுடன் அவற்றின் பன்முகத்தன்மை அறநெறிகளை பாதுகாத்துள்ளது –குடியரசு துணைத்தலைவர்
प्रविष्टि तिथि:
09 JAN 2026 4:49PM by PIB Chennai
மொழி நாகரீகத்தின் மனசாட்சியாக உள்ளதென்றும் அதன் மதிப்புகள் தலைமுறைகளைக் கடந்தது என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
புதுதில்லியில் இன்று இந்திய மொழிகள் குறித்த 3-வது சர்வதேச மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். பண்டைய கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் முதல் தற்போதைய டிஜிட்டல் எழுத்துக்கள் வரை மொழிகள் மனித குலத்திற்கான தத்துவங்கள், கவிதைகள், நெறிமுறைகள மற்றும் அறிவியல் சார்ந்த மரபுகளை பாதுகாத்து வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதை நினைவு கூர்ந்த அவர், நாட்டில் உள்ள பல்வேறு மொழிகள் அறிவுசார் மரபுகளுக்கு சான்றுகளாக உள்ளதென்று அவர் கூறினார். பன்முகத்தன்மை கொண்ட இந்திய மொழிகள் நாட்டை ஒருங்கிணைக்கிறது என்றும் அதன் நெறிமுறைகள் இந்தியாவின் நாகரீக பண்பாட்டை பாதுகாத்து வருபவையாக உள்ளன என்று அவர் கூறினார்.
மாநிலங்களவையின் தலைவராக பொறுப்பேற்று, தமது முதலாவது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டபின், நாடாளுமன்ற உறுப்பினர்களில் தாய்மொழியில் பேசுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறினார்.
ஒவ்வொரு குடிமகனும் தனது தாய்மொழியில் பேசும் போது ஜனநாயக நடைமுறைகள் வளமையடைகிறது என்று குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212912®=3&lang=1
****
TV/SV/SH
(रिलीज़ आईडी: 2213012)
आगंतुक पटल : 15