பாதுகாப்பு அமைச்சகம்
பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு ஐஎன்எஸ் சில்கா கப்பலில் நடைபெற்றது
प्रविष्टि तिथि:
09 JAN 2026 9:12AM by PIB Chennai
பயிற்சி முடித்த வீரர்களின் அணிவகுப்பு ஐஎன்எஸ் சில்கா கப்பலில் நேற்று (09.01.2026) நடைபெற்றது. இந்த 16 வாரகால கடற்படை பயிற்சியில் 113 பெண் அக்னி வீரர்கள் உட்பட மொத்தம் 2,172 அக்னிவீரர்கள் பயிற்சி பெற்றனர். இந்தப் பயிற்சிக் காலத்தில் ஒழுக்கம், நெகிழ்வுத் தன்மை, போர்த்திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.
கண்கவர் அணிவகுப்பில் தெற்கு கடற்படை துணை அட்மிரல் சமீர் சக்சேனா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார். பயிற்சியை நிறைவு செய்த வீரர்களின் அணிவகுப்பு விழாவில் புகழ்பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள், விளையாட்டு வீரர்கள், மூத்த கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய தெற்கு கடற்படை துணை அட்மிரல் சமீர் சக்சேனா, கடற்படையில் கடமை, மரியாதை, துணிச்சல் போன்ற முக்கிய அம்சங்களை உள்வாங்கிக் கொண்டு தங்களின் திறனை மேம்படுத்திக் கொள்ளவும் தொழில்நுட்ப ரீதியில் செயல்படவும் வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்தப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வீரர்களுக்கு அவர் வாழ்த்துத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212696®=3&lang=1
---
TV/SV/KPG/PD
(रिलीज़ आईडी: 2212812)
आगंतुक पटल : 20