பாதுகாப்பு அமைச்சகம்
வீரக்கதை 5.0-வில் சாதனை அளவாக 1.92 கோடி மாணவர்கள் பங்கேற்றனர்
प्रविष्टि तिथि:
08 JAN 2026 3:51PM by PIB Chennai
குடியரசு தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சகமும் மத்திய கல்வி அமைச்சகமும் ஏற்பாடு செய்திருந்த வீரக்கதை 5.0 திட்ட முன்முயற்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த ஆண்டு 1.90 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 1.92 கோடி மாணவர்கள் இதில் பங்கேற்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து இந்த எண்ணிக்கை மிக அதிகமாகும். தேசிய அளவில் 100 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்த ஆண்டு முதல் முறையாக இந்தியாவின் வளமையான ராணுவ பாரம்பரியங்கள், உத்திகள், இயக்கங்கள் தொடர்பாக வீடியோ காட்சி, தொகுப்புரை, செய்தி மற்றும் கதை சொல்லல் போன்ற வடிவங்களில் இந்த முன்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் முறையாக வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிகளும் இந்த முன்முயற்சியில் பங்கேற்றது. நாடுகளில் உள்ள 91 பள்ளிகளைச் சேர்ந்த 28,005 மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தனர். பள்ளி அளவிலான தேர்வு 2025 நவம்பர் 10 அன்று நிறைவடைந்தது. மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் மதிப்பீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 4,020 விண்ணப்பங்கள் தேசிய அளவிலான மதிப்பீட்டிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதிலிருந்து 100 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் மூலம் கௌரவிக்கப்பட உள்ளனர். ஒவ்வொரு வெற்றியாளரும் ரூ.10,000 ரொக்கப்பரிசு பெறுவதுடன் கடமைப்பாதையில் நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பு 2026-ஐ காண்பதற்கான வாய்ப்பையும் பெறுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212438®=3&lang=1
-----
TV/IR/KPG/PD
(रिलीज़ आईडी: 2212520)
आगंतुक पटल : 20