தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
ஊரக நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்த அஞ்சல் துறை மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கையெழுத்து
प्रविष्टि तिथि:
07 JAN 2026 7:13PM by PIB Chennai
மத்திய அமைச்சர்கள் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில், தபால் துறையும் ஊரக வளர்ச்சி அமைச்சகமும் இன்று ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. " அஞ்சல் சேவை, மக்கள் சேவை" என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்தியா அஞ்சல் வங்கி வாயிலாக சுயஉதவிக் குழுக்கள் மற்றும் கிராமப்புறக் குடும்பங்களுக்கு வீட்டு வாசலிலேயே வங்கிச் சேவைகள் வழங்கப்படும். மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள இயந்திரங்கள் வழங்கப்படும். இது பணமில்லாப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதோடு முறையான கணக்குப் பதிவிற்கும் உதவும்.
மேலும், கிராமப்புற மகளிர் தயாரிக்கும் பொருட்களை உலகளாவிய சந்தைக்குக் கொண்டு செல்ல ' அஞ்சல் நிலைய ஏற்றுமதி மையங்கள்' பயன்படுத்தப்படும். ஆதார் பதிவு, காப்பீட்டுச் சேவைகள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினரை வங்கியின் பிரதிநிதிகளாக நியமித்து அவர்களுக்குப் புதிய வாழ்வாதாரத்தை உருவாக்குவதும் இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். அஞ்சல் துறையின் 1.60 லட்சம் நிலையங்கள் மற்றும் 2.4 லட்சம் கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள் மூலம் கடைக்கோடி கிராமம் வரை டிஜிட்டல் மற்றும் நிதிப் புரட்சியைக் கொண்டு செல்ல இந்தத் திட்டம் வழிவகை செய்யும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212183®=3&lang=1
செய்தி வெளியீட்டு எண்: 2212183
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2212281)
आगंतुक पटल : 15