சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் 50,373 பொது சுகாதார நிறுவனங்கள் தேசிய தர உத்தரவாத நிலைக்கான சான்றளிக்கப்பட்டுள்ளது
प्रविष्टि तिथि:
07 JAN 2026 4:03PM by PIB Chennai
பொது சுகாதார சேவைகளின் தரத்தை வலுப்படுத்துவதில் மத்திய அரசு சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. 2025 டிசம்பர் 31 வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 50,373 பொது சுகாதார நிறுவனங்கள் தேசிய தர உத்தரவாத நிலைக்கான சான்றளிக்கப்பட்டுள்ளது. இது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் உருவாக்கியுள்ள விரிவான தரக்கட்டமைப்பாகும்.
தேசிய தர உத்தரவாத நிலை சான்றளிப்புக்காக இந்திய பொது சுகாதார சேவை முறை 50,000 என்ற எண்ணிக்கையைக் கடந்துள்ளது பெருமைமிக்க தருணமாகும். 2015-ம் ஆண்டில் தேசிய தர உத்தரவாத நிலை சான்றளிப்பு முறை மூலம் நோயாளிகளின் பாதுகாப்பு, நோயாளிகளை மையமாகக் கொண்ட மற்றும் தரஉத்தரவாத சேவைகளை உறுதி செய்ய தொடக்கத்தில் மாவட்ட மருத்துவமனைகளில் வெறும் 10 சுகாதார சேவைகளுக்கு சான்றளிக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து இந்தக் கட்டமைப்பு மாவட்ட துணை மருத்துவமனைகள், சமுதாய நல மையங்கள், ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2212094®=3&lang=1
AD/IR/KPG/PD
(रिलीज़ आईडी: 2212136)
आगंतुक पटल : 16