பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் நேர்ந்த உயிரிழப்பிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து நிவாரணம் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2025 6:39PM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத்  தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டிருப்பதாவது:

அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு  பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா  ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi”

***

(Release ID: 2202503)

AD/RB/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2212093) வருகையாளர் எண்ணிக்கை : 15