ரெயில்வே அமைச்சகம்
பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அதிகரிக்கும் மத்திய அரசு
प्रविष्टि तिथि:
06 JAN 2026 6:32PM by PIB Chennai
ரயில்வே அமைச்சகம் தனது உள்கட்டமைப்பு மற்றும் சேவைகளை நவீனப்படுத்தி வருகிறது. குறிப்பாக, பொது மக்களின் பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வசதியான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்திலான பயணத்தை உறுதி செய்வதே மத்திய அரசின் முக்கிய நோக்கமாகும்.
நவீன ரயில் பெட்டிகள் உற்பத்தியில் சாதனை
சாமானிய பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளின் உற்பத்தியில் ரயில்வே சாதனை படைத்துள்ளது.
2025–26 நிதியாண்டு: நடப்பு நிதியாண்டில் 4,838 புதிய எல்.எச்.பி பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளைத் தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
2026–27 நிதியாண்டு: அடுத்த நிதியாண்டில் 4,802 நவீன பெட்டிகளைத் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள் மற்றும் கூட்ட நெரிசல் மேலாண்மை
பண்டிகைக் கால நெரிசலைச் சமாளிக்க 2025-ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 43,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில் பயணங்கள் இயக்கப்பட்டன. மகா கும்பமேளா, கோடைகாலம் மற்றும் சத் பூஜைக்கு அதிகப்படியான ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும், புது தில்லி ரயில் நிலையத்தைப் போலவே நாடு முழுவதும் 76 முக்கிய நிலையங்களில் பயணிகள் தங்கும் பகுதிகள் உருவாக்கப்படவுள்ளன.
டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மை
உண்மையான பயணிகள் டிக்கெட் பெறுவதை உறுதி செய்ய மத்திய அரசு 'ஆதார் சரிபார்ப்பு' முறையைப் பலப்படுத்தியுள்ளது.
ஆதார் சரிபார்ப்பு செய்த பயனர்கள் மட்டுமே தற்போது 'தட்கல்' டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
முறைகேடாகச் செயல்பட்ட சுமார் 5.73 கோடி சந்தேகத்திற்குரிய IRCTC கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு மற்றும் புதிய ரயில்கள்
பாதுகாப்பிற்கான நிதி ஒதுக்கீடு கடந்த 10 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரிக்கப்பட்டு, நடப்பு ஆண்டில் ரூ. 1,16,470 கோடியாக உள்ளது. இதன் விளைவாக, ரயில் விபத்துகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.
மேலும், குறைந்த கட்டணத்தில் உயர்தர வசதிகளை வழங்கும் அமிர்த் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பிராந்திய இணைப்பை வலுப்படுத்த புஜ்-அகமதாபாத் மற்றும் ஜெயநகர்-பாட்னா இடையே நமோ பாரத் (Namo Bharat) விரைவு ரயில் சேவைகளும் தற்போது செயல்பாட்டில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211840®=3&lang=1
(வெளியீட்டு அடையாள எண் : 2211840)
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2211943)
आगंतुक पटल : 21