பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய எரிசக்தி வாரம் 2026, ஜனவரி 27-30 வரை கோவாவில் நடைபெறுகிறது

प्रविष्टि तिथि: 06 JAN 2026 3:59PM by PIB Chennai

இந்திய எரிசக்தி வாரம் 2026, ஜனவரி 27-30 வரை கோவாவில் நடைபெறவுள்ளது. எரிசக்தித் துறைக்கு உலகளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வரும் சூழலில், பல்வேறு நாடுகளின் அமைச்சர்கள், சர்வதேச நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், நிதி நிறுவனங்கள், கல்வித்துறையினர் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்கின்றனர். இந்த ஆண்டின் முதல் சர்வதேச எரிசக்தி மாநாடாக நடைபெறவுள்ள இந்திய எரிசக்தி வாரம், எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்துவது, முதலீட்டை ஊக்குவிப்பது, கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது போன்றவற்றிற்கான நடைமுறை மற்றும் செயல்படுத்தக்கூடிய வழிவகைகளை  மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.

உலகளவிலான எரிசக்தி அமைப்புகள், அதிகரித்து வரும் தேவை, புவிசார் அரசியல் நிச்சயமற்ற சூழல் மற்றும் விரைவான பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கான உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ளும் நிலையில், இந்திய எரிசக்தி வாரம் விவாதங்கள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் ஒரு முக்கிய தளமாகச் செயல்படும். முந்தைய பதிப்புகளின் உத்வேகத்தின் அடிப்படையில், இந்த நிகழ்வில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 - ம் ஆண்டு நடைபெற்ற பதிப்பில் 68,000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 570 கண்காட்சியாளர்கள் மற்றும் 5,400 மாநாட்டுப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மேலும், 100 மாநாட்டு அமர்வுகளில் 540-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் உரையாற்றினர். 2026 - ம் ஆண்டு நடைபெறும் இந்திய எரிசக்தி வாரம் நிகழ்ச்சியில், இது உலகின் முன்னணி எரிசக்தி தொடர்பான தளங்களில் அதன் நிலையை வலுப்படுத்தும்.

இந்திய எரிசக்தி வார நிகழ்வை, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய பெட்ரோலியத் தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் டிஎம்ஜி ஆகியவை  இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. 

இதில் அமெரிக்காக்கள், ஐரோப்பா, மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய-பசிபிக் பிராந்தியங்களில் இருந்து பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு அமைப்பில் இந்திய எரிசக்தி வாரத்தின் அதிகரித்து வரும் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211769&reg=3&lang=1

(Release ID:2211769)

****

TV/SV/SH


(रिलीज़ आईडी: 2211923) आगंतुक पटल : 22
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu