பெருநிறுவனங்கள் விவகாரங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் சார்பில் முதலீட்டாளர் முகாம் பெங்களூருவில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 06 JAN 2026 12:48PM by PIB Chennai

மத்திய அரசின் பெருநிறுவனங்கள் விவகார அமைச்சகத்தின் கீழ் உள்ள முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையம் இந்திய பங்குச்சந்தை மற்றும் பரிமாற்ற வாரியம், சந்தை உள்கட்டமைப்பு நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூருவில் 2026 ஜனவரி 3 அன்று முதலீட்டாளர் முகாமை வெற்றிகரமாக நடத்தியது. உரிமைகோரப்படாத ஈவுத்தொகைகள், பங்குகள், நிலுவையில் உள்ள முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணைய உரிமைகோரல்கள் தொடர்பான விவகாரங்களுக்கு முதலீட்டாளர்களுக்கான விரிவான தளமாக இந்த முகாம் நடைபெற்றது. 

இந்த ஒரு நாள் முகாமில் பெருமளவில் கலந்துகொண்ட கர்நாடகாவைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்கு குறைதீர்ப்பு, உரிமைகோரல் வசதி, முதலீட்டாளர் சேவை வசதி ஆகியவை ஒரே தளத்தில் அளிக்கப்பட்டது. முதலீட்டாளர் விழிப்புணர்வை மேம்படுத்தவும், உரிமைகோரலுக்கு தடையின்றி தீர்வு காணவும் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி ஆணையத்தின் உரிமைகோரல்கள் மற்றும முதலீட்டாளர் சேவைகளுக்கான முழுமையான வழிகாட்டுதல்கள் கொண்ட புத்தகம் வெளியிடப்பட்டது. இம்முகாமில் பெங்களூரு மற்றும் அதன் அருகாமைப் பகுதியைச் சேர்ந்த 900-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் மற்றும் உரிமைகோருவோர் பங்கேற்றனர்.

இந்த முகாமில் கடந்த ஆறு முதல் ஏழு ஆண்டுகளாக உரிமைகோரப்படாமல் இருந்த ஈவுத்தொகைகள் மற்றும் பங்குகளை நேரடியாக பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டது. அத்துடன் நியமனதாரர்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளும் அளிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211713&reg=3&lang=1    

***

AD/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2211743) आगंतुक पटल : 28
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Telugu , Kannada