கூட்டுறவு அமைச்சகம்
கூட்டுறவுத் துறை மூலம் ஊட்டச்சத்து பாதுகாப்பை நோக்கிய ஒரு முக்கிய முயற்சி: ஊட்டச்சத்துக்கான தேசிய பால்வள வாரிய அறக்கட்டளையின் மாநாட்டை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
05 JAN 2026 6:13PM by PIB Chennai
"ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டை அகற்றுவதில் பெருநிறுவன சமூகப் பொறுப்பின் பங்கு" என்ற தலைப்பில் ஊட்டச்சத்துக்கான தேசிய பால் வள வாரிய அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்படவுள்ள சமூக பொறுப்புணர்வு மாநாட்டை ஜனவரி 6, 2026 அன்று புதுதில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைப்பார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், திருமதி அன்னபூர்ணா தேவி, திரு கிருஷ்ணன் பால் குர்ஜார் (கூட்டுறவு), இணை அமைச்சர் திரு. முரளிதர் மொஹோல், எஸ்.பி. சிங் பாகேல், திரு. ஜார்ஜ் குரியன், மத்திய கூட்டுறவு அமைச்சக செயலாளர் ஆஷிஷ் குமார் பூட்டானி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளர் திரு நரேஷ் பால் கங்வார், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் திரு அனில் மாலிக், என்டிடிபி தலைவர் டாக்டர் மீனேஷ் ஷா உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள்.
இந்த மாநாட்டின் போது, திரு அமித் ஷா, சத்தீஸ்கர், செயில்-பிலாய் எஃகு ஆலையின் பெருநிறுவன சமூகப் பொறுப்பு முன்முயற்சியின் கீழ் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தைத் தொடங்கி வைப்பார். இந்த முயற்சியின் கீழ், பிலாய் எஃகு ஆலையின் சுரங்கப் பகுதிகளில் அமைந்துள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சுமார் 4,000 குழந்தைகள் பயனடைவார்கள். மேலும், ஐடிபிஐ வங்கியின் சமூகப் பொறுப்பு முன்முயற்சியின் கீழ், ஷிஷு சஞ்சீவனி திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைப்பார். இந்தத் திட்டம் மகாராஷ்டிராவின் நாக்பூர் மாவட்டத்தின் கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடி மையங்களில் படிக்கும் சுமார் 3,000 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து ஆதரவை வழங்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211575®=3&lang=1
***
TV/BR/SE
(रिलीज़ आईडी: 2211650)
आगंतुक पटल : 14