மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தெலங்கானாவில் தனியார் நிறுவனத்தின் நவீன மீன்வளர்ப்பு பண்ணை, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதிநவீன மறுசுழற்சி மீன்வளர்ப்பு அமைப்பை மத்திய அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் நாளை திறந்து வைக்கிறார்
प्रविष्टि तिथि:
04 JAN 2026 10:17AM by PIB Chennai
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் நாளை (ஜனவரி 5, 2026) நடைபெறும் நிகழ்ச்சியில், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், நவீன மீன்வளர்ப்பு பண்ணை, ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதிநவீன மறுசுழற்சி மீன்வளர்ப்பு பண்ணையை திறந்து வைக்கிறார் .
ஸ்மார்ட் கிரீன் அக்வாகல்ச்சர் லிமிடெட் நிறுவனம், இந்தியாவின் முதல் வணிக அளவிலான வெப்பமண்டல மறுசுழற்சி மீன்வளர்ப்பு அமைப்பு அடிப்படையிலான ரெயின்போ டிரவுட் மீன்வளர்ப்பு பண்ணை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவியுள்ளது. தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கந்துகூர் மண்டலத்தில் அமைந்துள்ள ரெயின்போ டிரவுட் போன்ற உயர் மதிப்புள்ள குளிர்ந்த நீர் இனங்களை, வெப்பமண்டல காலநிலைகளில் ஆண்டு முழுவதும், மேம்பட்ட நீர் மறுசுழற்சி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வளர்க்க முடியும் என்பது உறுதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை, மீன்வளர்ப்பு என்பது குறிப்பிட்ட பருவநிலை மண்டலங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்ற நீண்டகால அனுமானங்களை முறியடிப்பதாக அமைந்துள்ளது.
நாட்டிற்குள் மீன்வளர்ப்புத் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
இந்தியாவின் மீன்வளர்ப்புத் துறையின் உயர் மதிப்பு வாய்ந்த பிரிவாக டிரவுட் வளர்ப்பு உள்ளது. இது பெரும்பாலும் இமயமலை மாநிலங்களான உத்தராகண்ட் , இமாச்சலப் பிரதேசம் , ஜம்மு காஷ்மீர், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றில் அதிகம் உள்ளது.
மீன்வளத் துறை, ரெயின்போ டிரவுட் குஞ்சு பொரிப்பகங்களை பல்வேறு பருவநிலை கொண்ட இடங்களில் உருவாக்குவதன் மூலம் இந்த வளங்களைப் பயன்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது. இது மீன் உற்பத்தியை கணிசமாக அதிகரித்து உள்ளூர் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2211212®=3&lang=1
***
AD/PLM/RK
(रिलीज़ आईडी: 2211235)
आगंतुक पटल : 19