பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குடியரசு தின அணிவகுப்புக்கான டிக்கெட்டுகள் விற்பனை ஜனவரி 5 முதல் தொடங்குகிறது

प्रविष्टि तिथि: 03 JAN 2026 10:59AM by PIB Chennai

2026 ஜனவரி 26-ம் தேதி புதுதில்லியிலுள்ள கடமைப் பாதையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்புக்கான டிக்கெட்டுகள், ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறும் படைகள் பாசறை திரும்பும் நிகழ்வுக்கான முழு ஒத்திகை, ஜனவரி 29-ம் தேதி நடைபெறும் படைகள் பாசறை திரும்பும் விழா ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் விற்பனை 2026 ஜனவரி 05 முதல் தொடங்கும்.

* குடியரசு தின அணிவகுப்புக்கான டிக்கெட்டுகள் விலை ₹100 & ₹ 20 என இருவிலைகளில் விற்பனை செய்யப்படும்.

* படைகள் பாசறை திரும்பும் நிகழ்வுக்கான முழு ஒத்திகைக்கான டிக்கெட் விலை ₹ 20.

* படைகள் பாசறை திரும்பும் நிகழ்வுக்கான டிக்கெட் விலை ₹ 100

 ஜனவரி 5-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை தில்லியில் ஆறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கவுன்ட்டர்களில் உரிய அடையாள அட்டையைக் காட்டி டிக்கெட்டுகளை நேரடியாக வாங்கிக்கொள்ளலாம்.

டிக்கெட்டுகளை www.aamantran.mod.gov.in என்ற இணையதளம் மூலமும் பதிவு செய்யலாம். 

2026 குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடர்பான விரிவான தகவல்களை https://rashtraparv.mod.gov.in/ என்ற தளத்தில் காணலாம்.

(Release ID: 2211006)

****

AD/PLM/SH


(रिलीज़ आईडी: 2211129) आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Gujarati